ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் 2ஆவது பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 16ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, சிறப்பான முறையில் நமது அபூதபீ காயல் நல மன்றத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
அபூதபீ - அமீரகk; வாழ் காயல் மாநகர சகோதர-சகோதரிகள் அனைவரும் தங்கள் குடும்ப சகிதம் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
தங்களின் உயர்ந்த ஆலோசனைகளையும், நமது காயல் மாநகரின் முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல பல கருத்துகளையும் தர அன்புடன் வேண்டுகிறோம்.
நேரம்: காலை 10 : 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இடம்: பழைய ஏர்போர்ட் ரோடு, K.F.C. பார்க் [அல் நூர் மருத்துவமனை அருகில்] அபூதபீ.
குறிப்பு: தங்களின் வருகையை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டுகிறோம்.
ஜும்ஆ தொழுகைக்குப் பின் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகன பொறுப்பாளர்கள்: ஜனாப் ஹுபைப் 050 849 0978 மற்றும் ஜனாப் ரிஃபாய் 055 420 3056
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
செய்தித் தொடர்பாளர்
காயல் நல மன்றம்
அபூதபீ - ஐக்கிய அரபு அமீரகம். |