1. Re:...ஒரு காக்கையின் புலம்பல் posted bysalai s nawas (singapore)[08 November 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 23589
ஆமா SK தம்பி எங்களுக்கும்தான் தண்ணி பிரச்சினை. முன்ன மாதிரியெல்லாம் இல்லை. முன்ன கல்யாண வீட்டில் கூட டாங்கி / கலயத்தில் தண்ணி இருக்கும், வயராற குடிப்போம். இப்பெல்லாம் பாக்கெட் தண்ணி, ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்க மாட்டேன்கிரான்கள். விட்டா பாக்கெட்ட கூட முளுங்கிடுவான்கள் போலே. எவன பார்த்தாலும் பசியிலே இருக்கிறாங்கள். முன்ன எல்லாம் எல்லோர் வீட்டிலேயும் நாட்டுகோழி கழிவு இருக்கும், ருசியா இருக்கும். இப்போ என்னன்னா பிராய்லர் கோழி தின்னு எல்லா நெறைய காக்கமார்களுக்கு கான்செர் வந்து செத்து போச்சு.
சரி சுத்தமா இருக்குமேன்னு கடல்கரைக்கி வந்தோம் ஆனா, கடலும் சுத்தமா இல்லை, எதோ சிவப்பா இருக்கு, மீன் திண்டால் கொமட்டுது. அதான் குருவித்துறை மையவாடியில் நின்னு பேசிகிடிருக்கோம். காக்காமார்களை நம்பி பிரயோசனம் இல்லை அதான் புன்னைகாயலுக்கு சாசாமார்களை நம்பி போலமன்னு யோசிக்கிறோம். அங்கே கடலும் சுத்தம். நாங்க எல்லாம் போன பிறகு எங்கள் நினைவாக காக்கைதுரைன்னு எதாவது கட்டுங்க...
3. Re:... posted byHusain Noorudeen (Abu Dhabi)[08 November 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23593
ஹூம், ஸாலிஹ், உனக்கு நக்கல் அதிகம் உண்டுன்னு தெரியும். ஆனா இந்த அளவுக்கு அது இருக்கும்னு நான் எதிர்பாக்கல..... எல்லாம் உன் வாப்பாட ஜீன்ஸ், அது வேற எங்க போகும் :-)
4. Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[08 November 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23597
Hussain Noordeen பாய் , நம்ம SK காக்கா இன்னும் வாப்பாட ஜீன்சையா போடுறாரு ? அப்புடீன்னா அது அவுங்க வாப்பா கொழும்பு ஸ்கூல்ல படிக்கும்போது போட்ட ஜீன்சாதான் இருக்கும் . ஹ்ம்ம் தொவச்சாரான்னு பாருங்கோ .
இது ஜீன்சும் இல்லை வேறு எந்த புடலங்காயும் இல்லை . நவீன விந்ஜானத்தின் கோளாறுதான் இது . முன்பெல்லாம் film roll உபயோகித்தோம் . தேவையோ , இல்லையோ , படம் எடுத்தால் எடுத்ததுதான் . அதனால் மக்கள் தேவையானதை மட்டும் படம் எடுத்தார்கள் . ஆனால் இப்போதோ படம் எடுக்கலாம் , எடுத்ததை அழிக்கலாம் , மீண்டும் அதில் படம் எடுக்கலாம் என்று card system . அதனால்தான் நம்ம ஸாலிஹ் காக்கா , சூரியனைக்காணோம் , கிடாய் பல்பு , பப்பாத்து , இன்று காயல்பட்டினம் கடல் , என்று " சின்னப்புள்ளத்தனமா " விளையாடிட்டிருக்கார்
பொதுவா இலவசம்னு வந்துட்டாலே மக்கள் அதை கையாளும் முறையே வேறு . அதுக்கு நம்ம ஸாலிஹ் காக்காவும் விதிவிலக்கா ? அட , நம்ம kayalpatnam .com கருத்துப்பகுதியையே ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கோங்க . ஒரு கருத்துக்கு 25 ரூபாய் சார்ஜ் என்று வைத்தால் அவனவன் துண்டக்காணோம் துணியக்காநோம்னு ஓடிடுவாங்க . இதுபோன்ற பப்பாத்து , கடலைக்காணோம் , சூரியனைக்காநோம்ன செய்திகளும் குறைந்திடும் .
5. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[08 November 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23600
( இந்த காக்கைகள் அவர்களுக்குள் கரைத்துக் கொடண்டது )
இந்த வலைதளக்காரர்களை கடுமையாக கண்டிக்கின்றேன்.
சென்ற வாரம் வரை நாங்கள், எதிரில், குடிநீர் உடைப்பு ஏற்பட்டு தெருவில் ஓடிக்கொண்டு இருந்த நீரில் குடித்தும், குளித்துக்கொண்டும் ஜாலியாக இருந்தோம். நீங்கள் வந்து புகைப்படம் எடுத்து, நெட்டில் போட்டு அதை எல்லாம் சரி செய்து விட்டீர்கள்...??!!!
இன்றோ, ஒரு சொட்டு தண்ணீருக்கு வாளி வாளியாக அலைகின்றோம். இது உங்களுக்கே நியாயமாக தெரிகின்றதா. இதுவரை நாங்கள் சாபம் விடவில்லை. பார்த்து நடந்தது கொள்ளுங்கள்.
6. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[08 November 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23603
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமை தம்பி .S.K.S.அவர்களே ....உங்கள் தலைப்பு காமடியே ....காமடிதான் ....தங்களின் காக்கா போட்டோவை பார்த்ததுமே எமக்கு செம சிரிப்பு வந்து விட்டது
...............நாமே நம் ஊரில் தண்ணீருக்கு கஷ்ட பட்டு கொண்டு இருக்கும் போது..... இந்த காக்காவுக்கு தண்ணீர் எங்கு இருந்து நாம் கொடுக்க ....( இப்பொழுது நல்ல மழையாக இருப்பது வேறு விஷயம் )
நாம்தான் எதற்கு எடுத்தாலும் நகர் மன்ற தலைவி அவர்களை குறை கூறி கொண்டே ....அவர்களை அனுகிரோமே.... அப்படி இருக்க ...நாம் பாவம் இந்த வாய் இல்லா பிராணிக்கு வேண்டி நம் நகர் மன்ற தலைவி அவர்களிடம் சென்று முறையிட்டு ............ காக்காவுக்கு தண்ணீர் தொட்டி வைக்க ஒரு தீர்மானம் போடலாமே .............சும்மா தமாசு......
7. எதையும் எளிதில் நம்பும் காக்க்கா....... .. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[08 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23605
மேலே உட்க்கார்ந்திருக்கும் காக்கா:
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கீழே இருக்கும் கிணற்றில் எப்படியாவது தண்ணீர் எடுத்து விடுகிறேன், மற்ற நம் நண்பர்களையும் கூப்பிடு சேர்ந்து குடிப்போம்!
கீழே நிற்கும் காக்கா நினைப்பது:
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மேலே வாளியில்தானே உட்கார்ந்து இருக்கிறீர்களே, அந்த வாளியில் உள்ள தண்ணியை நாம் முதலில் குடிக்கலாம்,
நீங்க பெருந்தன்மையால் எல்லோரையும் அழைத்தால்,
தண்ணி குடிக்கேறேன் என்ற சாக்கில் உங்களை கிணத்தில் தள்ளி விட்டாலும் விட்டுடுவானுவோ .
இந்த காக்க்காவுக்கு, எதுவும் தெரியலே, எல்லாத்தையும் எளிதில் நம்பி எது அசல் எது நகல் என்று தெரியாமலேயே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.
10. Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[08 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23612
பட்சி சாதி நீங்க,.... எங்க பகுத்தறிவாளரை பாக்காதீங்க, பட்சமாய் இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க , பழக்கத்தை மாத்தாதீங்க....காகம் காகா..... காகா.....அந்த காலத்தையும் நினைத்து பாருங்கள். மு.கா.வின் வசனங்கள்.
காக்கை தண்ணி குடிக்க கூட தனியாக வருவதில்லை, அது குடித்துவிட்டால் நமக்கு தண்ணி இல்லாமல் போய்விடுமே என்ற கவலையும். படுவதில்லை. எனக்கு இல்லா விட்டால் பரவா இல்லை, உனக்கும் இல்லையே என்று கவலைப்படுவதை இரண்டு காக்கைகளும் நமக்கு உணர்த்துகின்றன.
11. Re:...காக்கா posted byNIZAR AL (kayalpatnam)[08 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23615
காக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதை போல எதோ வேலையாக பள்ளிக்குள் போன செய்தியாளர் காக்கா வாளியில் உட்காரவும் பக்கா டைமிங்கில் கிளிக் செய்துள்ளார். என்னை பொருத்தமட்டில் இதுதாங்க நடந்திருக்கும். இந்த மாதிரி செய்திகள் நகைச்சுவை வாய்ந்ததாக இருப்பதால் DCW சம்பந்தப்பட்ட செய்திகளால் கடுப்பான, வேதனையும், வெறுப்பும், அடைகிற மக்களுக்கு மன ஆறுதலும், ரிலாக்ஸ் கிடைக்கிறது எனலாம்.
உண்மையிலே புகைபடத்தையும் தலைப்பையும் படித்தவர்கள் சிரிக்காமல் இருந்திருக்க முடியாது என எண்ணுகிறேன். எனவே இதுபோல செய்திகள் தொடர்ந்து தர வாழ்த்துக்கள்.
ஆனா இதுல பாருங்க, சின்னதா ஒரு புகைப்படம் போட்டு சிலபேரை கதை ஆசிரியராக ஆக்கி, மனுசங்களை நொடி பொழுதில் ஜோடி காக்கையாக புலம்ப வச்சிட்டாருன்னா பாருங்கலேன், இதாங்க இவர் ஸ்பெஷல், வசமா மாட்டிகிராதிங்க.
கைவலிக்க வலிக்க கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்த நமது முன்னோர்களை காணவில்லையே என்பதை நினைவு படுத்துவதாக இந்த படம் அமைந்துள்ளது.
பேங்காக்கில் நமதூர் வாசிகளை வயதில் சிறியவரோ பெரியவரோ தஞ்சாவூர், கும்பகோணம், நிடூர்காரர்கள் காக்கா என்று செல்லமாக அழைப்பார்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்.
13. காக்கை புலம்பியதோ? posted byAnsari YentY (KSA)[09 November 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23618
சில மாதங்களுக்கு முன் யானையின் கழிவு செய்தி.. இப்போது காக்கை தண்ணீர் குடிக்கும் செய்தி.. பிரமாதம்.. என்ன செய்தி வேண்டுமானாலும் வெளியிட்டு உங்கள் இணையதளத்தின் தரத்தை வெளிப்படுத்துங்கள்... அது உங்கள் இஷ்டம்.. ஆனால் கருத்து எழுதும் சகோதரர்கள் தாங்கள் கருத்து எழுதும் போது பலமுறை யோசித்து எழுதுங்கள்.. எதை வேண்டுமானாலும் எழுத முடியாது... அப்படியே எழுதினாலும் எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது..
காக்கை புலம்பியதோ இல்லையோ?? சாளை நவாஸ் நல்ல புலம்பி இருக்கிறார்.((நாங்க எல்லாம் போன பிறகு எங்கள் நினைவாக காக்கைதுரைன்னு எதாவது கட்டுங்க)) இது போன்ற அவசியமற்ற வார்த்தைகள் வீண் விவாதத்தை வளர்க்கும்.. அவர் அந்த பள்ளியின் பெயரை கேலி செய்கிறாரா??அல்லது ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதி இருக்கிறாரா?? அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.. அந்த பள்ளியின் பெயர்க்காரணம் அறிய ஆவல் இருப்பின் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும்.. நான் புலம்பவில்லை... காக்கைதான் புலம்பியது என்று சொல்லி அவர் நழுவ மாட்டார் என்றே நம்புகிறேன்..வஸ்ஸலாம்.
“நான் ஒரு தடவை சொன்னா அது நூறு தடவை சொன்ன மாதிரி”, இதை நம்ம பால்க்காரன் கனேசனோ? பழக்கடைக்காரன் கோபாலோ? சொன்னா பாருடா இவன் திமிரை! அப்படீன்னு சொல்லிட்டு போய்கிட்டெ இருப்போம்.
லக்க..லக்க...லக்க...லக்க...லக்க அல்லது ம்மே...ம்மேன்னு ஆடு மாதிரி கத்தினால்? இவனுக்கு என்ன? லூஸான்னு கேட்போம். இதைத் தான் நடிகர் ரஜினிகாந் சொன்னாரு அது எந்த அளவுக்கு மக்களிடம் ரீச்சாயிடுச்சுன்னு நமக்கு தெரியும்! அவர் தலையை சொரிந்தாலும் சரி தாடி வளர்த்தலும் சரி அது மக்கள் ஸ்டைலாகவே கருதுவாங்க! காரணம், அதுலெ ஒரு ஈர்ப்பு இருக்குதுன்னு நம்புறாங்க!
அது போலத்தான் இதுவும்!
சாதாரண புகைப்படம், அன்றாட நிகழ்வு காக்கம் எங்கு வேண்டுமானாலும் அமரும். ஆனால் செய்தியை அவ்வப்போது சுவராஸ்யமான தலைப்புகளில் தந்து நம்மை அசத்துறதுலெ நம்ம எஸ்.கே.சாலிஹ் ஒரு சூப்பர் ஸ்டார்தான்! இவர் போட்ட காக்கா செய்தி எத்தனை பேர்களின் கற்பனையைத் தூண்டியுள்ளது. இதற்கு நானும் விதிவிலக்கல்ல.
இந்த காக்கா (எஸ்.கே) மூலம் நமக்கு ஒரு பாடம் உள்ளது. பதினாறு மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் உள்ளபடியால் நாம் நம் முன்னொர்கள் இரைத்த தலாக்கம்புகளை மறந்து விட்டோம். நாள் ஒன்றுக்கு 500, 600 வாளி தண்ணீர் இரைத்து பள்ளிவாசலின் ஹல்ழுகளை நிரப்பிய பல ஜாம்பவான்கள் வாழ்ந்து மறைந்து விட்டனர். காலப்போக்கில் மின்சாரம் வந்தபின் மோட்டார் பம்புகள் மூலம் நம் தேவைக்கான நீரை நாம் தேவைப்படும் போதெல்லாம் நிரப்பி விடுவோம். இன்று ஒரு மணி நேரம் கரண்ட்டும், இரண்டு மணி நேரம் பவர்கட்டும் பாடாய்ப்படுத்தி வரும் நிலையில் இந்த காகங்கள் “இனி பழைய காலம் போல் நீங்க தண்ணீர் இரைத்து பழகிக்கொள்ளுங்கள்”, என நமக்கு உணர்த்துவது போல் உள்ளது. ச்சே! கமெண்ட் எழுத நினச்ச என்னை இப்படி கட்டுரை எழுத வெச்சுட்டீங்களே?
குசும்பு: இந்த காக்கா எத்தனை காக்காக்களுக்கு இப்படி தண்ணி காட்டி இருக்கும்? கா...கா...கா...
15. கரும்பு கசக்கிறது வாய் குற்றம் posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[09 November 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23621
ஒரு புகைபடத்தை பார்க்கும் பல பேர் பல மாதிரி வர்ணிக்கிறார்கள். அது அவர்களுடைய மனநிலையை படம் பிடித்து காட்டுகிறது.
16. Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[09 November 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23629
Response to comment 15 :
இந்த செய்திக்கு சுமார் 13 கமெண்ட்ஸ் ( 15 - 4 and 15 ) வந்துள்ளது . ஒவ்வொருவரும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப சிறப்பாகவும் , சிலர் தமாசாகவும் எழுதியுள்ளனர் . ரசிக்கும்படியாக உள்ளது . அதுபோல்தான் கமென்ட் எண் 4 ம் .
ஒவ்வொரு கமெண்டும் பதிவிற்கு அனுப்புவது என்பது admin மனநிலையை பொருத்தது . வேண்டுமா , வேண்டாமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் .
கமென்ட் எண் 4 ஐ படித்தபின் உங்கள் மனநிலை எப்படி இருந்ததோ அதுபோல்தான் கமென்ட் எண் 15 ஐ படிக்கும்போது எனக்கும் தோன்றியது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross