தமிழகத்தில் மின் பற்றாக்குறை காரணமாக பல மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழை துவங்கியபோது மின்தடை நேரம் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக அடிக்கடி பல மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் வினவியபோது, 2 மணி நேரம் மின்தடை - ஒரு மணி நேரம் மின் வினியோகம் என்ற தொடர் சுழற்சியில் தினமும் 16 மணி நேரம் மின்தடையும், 8 மணி நேரம் மின் வினியோகமும் இருக்கும் என்றும், நேற்று முதல் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. Re:...விளக்கும் மண் எண்ணையும் posted bymackie noohuthambi (kayalpatnam)[07 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23572
முதல் அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தின் இந்த மின் பற்றாக்குறை இன்னும் ஒரு வருடம் வரை இருந்தே தீரும் என்பதுபோல் சொல்லிவிட்டு, ஜூன் மாதம் சரியாகி விடும் என்று சொன்னார்கள். எனவே இந்த மின்விநியோகம் சீராக இருக்கும் என்று யாரும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். மக்கள் தியாகம் செய்ய தயாராகி விட வேண்டும்.
புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்... இலவச மடிக்கணினி. இலவச அரிசி, இலவச சைக்கிள் கொடுப்பதை நிறுத்திவிட்டு வீட்டுக்கு ஒரு ஹரிக்கன் விளக்கும் தினசரி ஒரு லிட்டர் மண் எண்ணையும் வழங்க அம்மா அவர்கள் ஏற்பாடு செய்தால் மக்கள் உங்களை வாழ்த்துவார்கள். மின் விநியோகத்தையும் சரி செய்ய தேவை இல்லை, மக்கள் பழகி விடுவார்கள்.
அல்லது எதிர்கட்சியான தேமுதிக அல்லது முன்பு இலவச டிவி வழங்கிய திமுக இந்த விளக்கு மண் எண்ணை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தால் நல்லது..... என்ன ஆட்சியின் அலங்கோலங்கள். தமிழன் தலையில் மற்றவர்கள் மிளகாய் அரைப்பது ஒரு பக்கம் இருக்க, இவர்களே தமிழனை இருட்டில் தடுமாற விட்டு ஆளாளுக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு, ஊழல் புரிந்துகொண்டு நாட்டை குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முதன்மை மாநிலமாவதாவது வெங்காயமாவது .....
அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் நாமம் வாழ்க, மாற்றி மாற்றி நம்மை கேனயனாக்கி கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் வாழ்க! அவர்களுக்கு துணை போகும் நமது சமுதாய தலைவர்கள் வாழ்க!
2. பலிகடாவாகிய பாமர மக்கள். posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[07 November 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23574
கூடங்குளம் திட்டத்தைத் தொடர்ந்து அதுபோன்ற 60க்கும் மேற்பட்ட அணு மின் திட்டங்கள், அவற்றுக்கான அணுஉலைகள், 70 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட அணிவகுத்து நிற்கின்றன. மேலைநாடுகளில் காலாவதியாகிப் போன தொழில்நுட்பம், துருப்பிடித்து ஓட்டை உடைசலாகிப் போன நாசகார அணுசக்தி உலைகளை “நம்” தலையிலே கட்டிக் “காசா”க்கிக் கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்கள் அடிக்கும் கொள்ளையில் பங்கு போட்டு ஆதாயம் அடைவதற்காக, தனியார்துறையில் பல அணு மின் நிலையங்களை நிறுவக் காத்திருக்கிறார்கள், டாடா, அம்பானி, அதானி முதலிய தேசங்கடந்த இந்தியத் தரகு முதலாளிகள். பேரழிவு ஆயுத வியாபாரிகளைப் போல, இவர்களின் கொள்ளை இலாபவெறிக்கு எவ்வளவு கோடி மக்களையும் அணு உலைகளுக்குக் காவு கொடுக்கவும் தயாராய் உள்ளனர், இந்திய ஆட்சியாளர்கள்.
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பு ஏற்று கொண்ட நாள் முதல் இன்று வரையில் அம்மக்கள் வேலை இழப்பையும் வேலை இல்லா திண்டாட்டத்தையும் விலை வாசி உயர்வையும் சந்தித்து வந்த நிலையிலும் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக ஒபாமா தேர்ந்து எடுக்கபட்டு உள்ளார். அம்மக்கள் படித்தவர்கள் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்கள் மேல்கண்ட இன்னிலைக்கு ஒபாமா காரணம் அல்ல இது உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை என்பதை அவர்கள் புரிந்து வைத்ததின் முடிவுதான் ஒபாமாவின் அமோக வெற்றி.
சரி நம் நாட்டில் 2.மணி நேரம் மின் வெட்டு பஸ் கட்டனம் உயர்வு இல்லை பால் விலை உயர்வும் இல்லை மின்கட்டன உயர்வும் இல்லை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் உயர்வும் இல்லை அப்படி இருந்தும் தி.மு.க விற்கு எதிர் கட்சி அந்தஸ்தையும் மக்கள் வழங்கவில்லை படித்தவர்கள் படித்தவர்கள்தான் நாம் நாம்தான்.
இவ்வாறு செயற்கை மின்வெட்டை அமுல்படுத்தி மக்கள் எப்படியாவது தங்களுக்கு மின்சாரம் வந்தால் சரி என்ற மனநிலைக்கு வந்து விட்டால் தங்களின் திட்டம் நிறைவேறும் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
மக்களிடம் என்று விழிப்புணர்வு வருமோ அன்று தான் இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
3. Re:... posted byMauroof (Dubai)[07 November 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23576
செய்திக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பும் அதற்கு பதியப்பட்டுள்ள முதல் இரண்டு கருத்துக்களும் (நான் கருத்து பதியும் வரை) மிக மிக அருமை.
என்னதான் எழுதினாலும் பேசினாலும் சரி, அவைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும். அதிகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறமிருக்க, என்ன எழுதி என்ன பயன் என்ற மன வேதனை அதற்கு வேலி போடுகிறது.
4. ச்சீ...ச்சீ...வெட்கக்கேடு......த்தூ...த்தூ...மானக்கேடு...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[07 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23578
முதல்லெ இந்த நாசமாப் போன இலவசங்களை கொடுத்து மக்களை மடையர்களாக்கும் மிகக் கேவலமான யுக்தியை மாநில அரசு கை விட வேண்டும். அதற்கு பதிலாக நாட்டின் வளர்ச்சிக்கு முதுகுத்தண்டான மின்சாரத்தின் உற்பத்தி அளவை கூட்ட வழி செய்ய வேண்டும்.
எந்த மாநிலத்திலும் இல்லாத மிகக் கேவலமான அவல நிலை நமது தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? ஒரு காலத்திலும் இல்லாத இந்தக் கொடுமையை சகிக்க முடியாமல் தமிழக மக்கள் கையாளத் தெரியாத இந்த அரசை காரித்துப்பிக் கொண்டு கூறுவது, “ ச்சீ...ச்சீ...வெட்கக்கேடு......த்தூ...த்தூ...மானக்கேடு”.
5. Re:...மூன்று மாதம் posted byNIZAR AL (kayalpatnam)[08 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23581
இரண்டு மணிநேரம் மின்வெட்டு இருந்த திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எரிந்திவிட்டு இப்பொழுது பதினாறு மணி நேரம் பெற்றுள்ளார்கள். மூன்று மாதத்தில் சீராகிவிடும் என்று முதலமைச்சர் தொடர்ந்து சொல்வது வேடிக்கையாக உள்ளது, அவர் சொல்லும் அந்த மூன்று மாதம் காலண்டரில் கண்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்.
மக்களின் அடிப்படை தேவையான குடிநீர்,மின்சாரம்,போன்றவற்றை மக்களுக்கு வழங்க முடியாத இவர்கள், சுதந்திர விழா, குடியரசு விழா, சட்டசபை வைர விழா, இப்படி சூடு, சொரணை, வெட்கமில்லாமல் ஆட்சியாளர்கள் விழா எடுப்பது நகைப்புக்குரியது இல்லையா.
தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத இந்த மின்வெட்டை இந்த அரசு தீர்வு ஏற்படுத்த தெரியாமல் திணறுகிறது எனலாம். என்ன விலை கொடுத்தாலும் மக்களுக்கு வழங்கவேண்டும், இல்லையேல் பதவியை தூக்கிஎறிந்து விட்டு தங்கள் கட்சிகாரர்கள் ஆசைபடுவதுபோல் பிரதமராக ஆகலாமே,
6. வீட்டுக்கு ஒரு இலவச இன்வைட்டர் posted byM.S.Kaja Mahlari (Singapore)[08 November 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 23582
நீங்கள் எத்தனை மணிதியாலங்கள் வேண்டுமானாலும் "கரண்ட் கட்டு" பண்ணிகொள்ளுங்கள் .மீண்டும் சீரான மின்விநியோகம் வரும்வரை வீட்டுக்கு ஒரு இலவச "இன்வைடர் " இலவசமாக வழங்கிவிடுங்கள் . எத்தனையோ இலவசங்களை வழங்குவதை விட இதை இலவசமாக வழங்கினால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும். எல்லாம் ஒரு நப்பாசைதான் ! முடியுமா? என யாரும் கேட்டு விடாதீர்கள்!
7. ஆதிக்க வெள்ளையன் இடமிருந்த நம் நாடு... இலவச கொள்ளையன் இடம் சென்று விட்டது... மிக வேதனை... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[08 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23586
படித்த வெள்ளக்காரன் கையில் முன்பு இருந்த ஆட்சி முன்னேற்றம்..! இன்று படிக்காத பாமர மக்களால் கொள்ளைகாரர்கள் கையில் (பின் நோக்கி) ஆட்சி சென்று சீரழிகிறது....
உதாரணம்:- பெரும் மக்கள் தொகை கொண்ட சீனா நாட்டின் ஒரு பகுதியை (1896 - 1996) 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஆண்ட பிரிட்டிஷ் வெள்ளைக்காரன் அந்த நாட்டின் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை தொலைநோக்கு செயல்பாடு திட்டங்களை அனைத்தையும் வளர்ச்சி பாதையில் விட்டு சென்றுள்ளான்...
நாட்டில் உள்ள அணைத்து கொள்ளைக்கார அரசியில்வாதிகள் அனைவர்களையும் சிறைவைத்து மீண்டும் வெள்ளைக்காரன் இந்நாட்டை அவனே ஆளவேண்டும்...! போல மனதில் தோன்றுகிறது....
ஆதிக்க வெள்ளையன் இடமிருந்த நம் நாடு... இலவச கொள்ளையன் இடம் சென்று விட்டது... மிக வேதனை...
நாட்டு மக்களை இலவசம்.. இலவசம்... என்று அனைத்தையும் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக...! உழைத்து தின்ன மனம் இல்லாதவர்களாக இந்த கொள்ளைக்கார அரசியல் வாதிகள் ஆக்கி விட்டார்கள்... மாறபோவது அல்ல... இனி நம் நாட்டில் ஒரு புரட்சி வந்தால் தான் ஒரு மாற்றமே.. வரும்...
10. அம்மாவுக்கு ஜே posted byAbdul Cader (Saudi Arabia)[08 November 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23601
அன்பிற்கினியவர்களே, கருது பதிவு செய்த நல உள்ளங்களே , எங்கள் அம்மா என்றுமே ஒரே பதிலை தான் சொல்வார்கள், நேற்று, இன்று, நாளை ஒரு பேச்சு என்ற இடமே இல்லாமல் ஒரே பேச்சாக தான் சொல்வார்கள், புரட்சி தலைவி அம்மா அவர்கள் மின் வெட்டுக்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள் கூடிய சீக்கிரமே நல்ல ஒரு விடுவு காலம் வரும்.
அது வரையிலும் மக்கள் தயவு செய்து பொறுமை காக்க முதலமைச்சரின் சார்பில் அகில உலக அம்மா பேரவையின் பிரதிநிதி கேட்டுக்கொள்கிறேன்.
11. சம்சாரம் உண்டு ஆனால் மின்சாரம் எங்கே...? posted byhasbullah mackie (dubai)[08 November 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23602
காஜா ஆலிம் மஹ்லரி சொல்லுவது போன்று inverter கொடுத்தாலும் கூட அதன் battery சார்ஜ் பண்ணுவதற்கு current இல்லை என்பது தான் ஒரு வேதனைகுரிய விஷயம்...
ஏற்கனவே சொன்னது போன்று இலவச மனிகணினி கொடுத்து விட்டு power இல்லையென்றால் எதை வைத்து recharge பண்ணுவது.
நாம் அல்லாஹுவிடம் dua கேட்க வேண்டும்
பழைய காலத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல நாமும் வாழ்வதற்கு ...மற்றும் இரவு நேரத்தில் முழு நிலா எல்லா நாட்களிலும் வானத்தில் பிரகாசமாக தெரியவும், (அதுவாவது தெருவில் பிரயோஜனமாக இருக்கும்..)
இந்த மாதிரியான power cut இரவு நேரங்களில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்..இது மட்டுமல்லாது மற்ற விஷ ஜந்துக்களின் பாதிப்பும் கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு
கொசுக்களுக்கு காட்டில் மழை என்று தான் சொல்லவேண்டும்...
இந்நேரத்தில் கொசு மருந்துக்கள் எல்லா தெருக்களிலும் நகராட்சி மூலம் அடிக்க ஆவன செய்ய வேண்டும்..
கொசு விரட்டிகள் (ALL OUT) போன்றவைகள் மூலம் கொடுமையான வியாதிகள் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக சமீபத்தில் படித்தேன்.
அழுதாலும் தீராது பல மணி நேரம் மின்தடை! ஆர்ப்பாட்டம் பண்ணினாலும் அடங்காது மின் பற்றாக்குறை!!! அம்மா ...புரட்சி தலைவி அம்மா ....இலவச மடிக்கணினி, இலவச மிக்ஸ்சி, இலவசமின்விசிறி இவைகள் எல்லாம் கொடுக்குரீங்கோ ........,ஆனா யாருமா மின்சாரம் கொடுப்பா ??? இது என்னமோ சொன்ன கதையாலோ இருக்குது
13. Re:... posted byD Shaik Abbas Faisal (Kayalpatnam)[08 November 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 23614
ஆனால் அவர்கள் சொல்வது போல் 2 மணி நேரம் மின் தடை 1 மணி நேரம் மின் விநியோகம் என்ற நிலையில் நம்மூரில் இல்லையே , தொடர்ந்து 3 மணி நேரம் ( காலை 6 to 9) மின் தடை பின்னர் 1 மணி நேரம் மின் விநியோகம் பின்னர் 4 மணி நேரம் (10 to 2pm)மின் தடை பின்னர் 4:30 pm வரை மின் விநியோகம் பின்னர் 4:30 to 7pm வரை மின் தடை பின்னர் 1 மணி நேரம் மின் விநியோகம் பின்னர் 2 மணி நேரம் மின் தடை .இப்படி தானே நம்மூரில் கடந்த 3 நாள்களாக நடைமுறையில் உள்ளது ,இதற்கு என்ன விளக்கம் அவர்களிடம் உள்ளது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross