மூக்குப்பீறியிலுள்ள புனித மாற்கு மேனிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, எழுவர் கால்பந்துப் போட்டி 06.11.2012 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தின் 8 பள்ளிகளின் அணிகள் பங்கேற்ற - நாக்அவுட் முறையிலான இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் கால்பந்து அணியும் பங்கேற்றது.
துவக்கப் போட்டி நேற்று காலை 08.30 மணியளவில் நடைபெற்றது. இப்போட்டியில் செவன்த் டே மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி அணியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் அமீர் 2 கோல்களும், இஸ்மாஈல், அஃப்ரஸ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து, அணியை வெற்றிபெறச் செய்தனர்.
நண்பகல் 12.30 மணியவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், நாசரேத் மர்காஷிஸ் மேனிலைப்பள்ளி அணியை எதிர்த்து களம் கண்ட எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.. அந்த அணியின் அஃப்ரஸ் 2 கோல்களும், அமீர் ஒரு கோலும் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தனர்.
மாலை 04.30 மணியவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தூத்துக்குடி புனித லஸால் மேனிலைப்பள்ளியை எதிர்த்து ஆடிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, கோப்பையை வென்றது. அந்த அணியின் மூஸா 2 கோல்களும், ஹஸன் ரிழா, அஃப்ரஸ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான பரிசை எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வீரர் அமீர் பெற்றுக்கொண்டார்.
வெற்றிபெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணியை, அப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம், ஜமால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தகவல்:
ஹிட்லர் சதக்
படங்கள்
ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ் |