காயல்பட்டினத்திலிருந்து தரைவழியாக சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புன்னக்காயல் என்றழைக்கப்படும் இது கடலோர கிராமம். இம்மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளது.
புன்னைக்காயல் கிராமத்தையொட்டியுள்ள கடல், காயல்பட்டினம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் கழிவுநீர் கடலில் கலக்குமிடத்தைத் தாண்டி வடபகுதியில் அமைந்துள்ளது. கடல் நீரோட்டம் பெரும்பாலும் தெற்குத் திசை நோக்கியே இருக்குமென்பதால், காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட தென்பகுதி ஊர்களையொட்டியுள்ள கடல் நீர் செந்நிறமாக மாறும் காலங்களில் கூட புன்னைக்காயலில் நீர் நிறம் ஒருபோதும் மாறாது என அப்பகுதி மீனவ குடிமக்கள் தெரிவித்தனர்.
மாசற்ற புன்னைக்காயல் கடற்பகுதியிலிருந்தே - டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்குத் தேவையான கடல் நீர் உறிஞ்சப்படுகிறது.
03.11.2012 சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்ட - புன்னைக்காயல் மற்றும் அதனையொட்டியுள்ள பொலிமுகம் கடற்பரப்பு காட்சிகள் பின்வருமாறு:-
படங்களில் உதவி:
S.A.நூஹ் (ஹாங்காங்)
[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 11:17 / 05.11.2012] |