02.11.2012 அன்று காலை 09.00 மணியளவில் படப்பதிவு செய்யப்பட்ட - காயல்பட்டினம் கடற்பகுதியில், டி.சி.டபிள்யு. ஆலையின் தென்பகுதியிலுள்ள ஓடை நீர் கடலில் கலக்கும் காட்சிகள்:-
1. Re:... posted byS.H.Khaja Kamal (Kayal Patnam)[03 November 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 23429
அல்லாஹ் உதவியால் மிகப் பெரும் ஆதாரப் பூர்வமான விளக்கப் படத்தை தந்து நமக்கு விழிப்புணர்ச்சியை தந்த எனதருமை நண்பர் சுபுஹான் பீர் முஹம்மது அவர்களுக்கு அல்லாஹ் த ஆலா நற் சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தந்தருள்வானாக ! ஆமீன்.
இந்த விளக்க படங்களை கொண்டு நமது நகராட்சி முயற்சி செய்து , மாவட்ட கலெக்டர் (மற்றும்) மாசு கட்டுப்பாட்டு துறைக்கு எடுத்து செல்லப்பட வேண்டும். இல்லையெனில் இதே நிலையே தொடர்ந்து கொண்டே இருக்கும் இதிலிருந்து நமதூர் மக்கள் யாவரையும் வல்ல ரஹ்மான் பாது காத்தருள்வானாக ! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் . வஸ்ஸலாம்.
போட்டோ எல்லாம் அழகா எடுத்து போட்டு இருகுரிங்க
உங்களையும் DCW காரங்க வேலைகி வாங்கிட போறாங்க
க்டரை கரையை ஒட்டி படம் எடுத்து இருக்கீங்க
அதற்கு பக்கத்துல ஒரு கிராமம் இருக்கும் அங்க சென்று
அந்த மக்களின் கருத்தையும் கேட்டு எழுதி இருக்கலாம்.
நீங்க போட்டோ எடுத்த இடத்தில உள்ள தண்ணீரை ஒரு பட்டேல எடுத்து டேஸ்ட்டுக்கு Mangalneervaykaal லாப் இருக்கு அங்கு குடுத்து ரிப்போர்ட் எடுத்து கலெக்டர் இடம் கொடுங்கள்
அப்படியே அந்த உப்பு அளத்தில உள்ள உப்பை எடுத்து
நல்ல மினரல் தண்ணீரில் கரைத்து ஒரு பட்டேல எடுத்து அதையும் டெஸ்ட் குடுங்கள்
எல்ல உணமயும் வந்து விடும்
இனொரு முக்கியமான செய்தி
DCW ல ச்ய்ளிண்டேரை சுத்தம் செயும்ம் பொது அதற்கு
அருகமையில் உள்ள பல்லி கூடத்துக்கு விடுமுறை விட்டு விடுவார்கள் இது எல்லாம் ஒரு சிலருக்கு தான் தெரியும்
Test ku ulla silavu panathai (KIM) thara thayaraga irukindrathu
நான் ஊரில் இல்லாத காரணத்தால் இது இங்கு பதிவு செய்கின்றான் தப்பாக நினைக்க வேண்டாம்
5. மக்கள் சக்தி ஒன்றே இதற்க்கு தீர்வு... இதுவே எனது கருத்து... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM )[03 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23439
இக்கொடுமையான நச்சு கழிவின் இப்புகைப்படத்தை எங்கு கொண்டு போய் சமர்ப்பித்து தீர்வு காணுவீர்கள்...
நகர் பொதுநல அமைப்புகள் இடமா...? நகராட்சி மன்றம் இடமா...?
தாசில்தார் இடமா...? மாவட்ட ஆட்சியர் இடமா...?
தமிழக முதல்வர் இடமா...? தமிழக கவர்னர் இடமா..?
நாட்டின் பிரதமர் இடமா...? இந்திய ஜனாதிபதி இடமா..?
இந்திய கடல் சார்புடைய மாசு கட்டுப்பாட்டு வாரிய (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) துறை இடமா...?
இக்கொடுமையின் ஆதாரபூர்வமான இப்புகைபடத்தை எங்கு சமர்பித்தாலும்... எடுத்து சென்றாலும் இந்த நச்சு கழிவுக்கு எதிராக (மக்கள் விழிப்புணர்வு) மக்கள் எழுச்சி பெற்று நாசக்கார தொழிற்சாலைக்கு முன் போராட்டம் நடத்தாத வரை எந்த சிறு மாற்றமும்...! எந்த துறையில் இருந்தும்...! எந்த பேச்சுவார்த்தைகளும் நடக்காது...!
மக்கள் சக்தி ஒன்றே இதற்க்கு தீர்வு... இதுவே எனது கருத்து...
விரைவில் அணைத்து கட்சிகள் மற்றும் நகர அமைப்புகளும் (புறநகர் அமைப்பு உட்பட) ஓன்று சேர்ந்து ஒரு மிக பெரிய ஆர்பாட்டத்தை அறிவியுங்கள்... சிறுமாற்றம் எதிர்பார்க்கலாம்...
மிக சிரமத்திற்கு மத்தியில் நகர மக்களின் நலனுக்காக இப்புகைபடத்தை எடுத்த சகோதரர் சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் அவர்களுக்கு எனது நன்றிகள் பல..
6. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[03 November 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23445
விடுமுறையில் ஊர் சென்றுள்ள சகோ. சுப்ஹான் அவர்கள் களப்பணியில் இறங்கின மாதிரி தெரிகின்றது. தொடரட்டும் உங்கள் பணி..!! சகோ. ஹமீத் ரிபாய், சகோ. ரபீக்.. போன்றவார்கள் வரிசையில் நீங்கள்... பாராட்டுக்கள்..!!
இந்த கொடுமைக்கு எல்லாம் விடிவு காலம் கூடிய விரைவில் கிட்டும், இன்ஷா அல்லாஹ்.
DCW எனும் குள்ளநரியின் தோலை உரித்து உலகிற்கு காட்டினால் மட்டும் போதாது. அதனை தொங்க விட வேண்டும். புரியவில்லையா? வானிலிருந்து வின்வெளிக்கலம் எடுத்து அனுப்பும் புகைப்படத்தையும் போட வேண்டும்.
காயல்பட்டினத்தின் தலைப்பகுதியில் இருந்து சிவப்பு நிறத்தில் ஒரு இரத்த ஆறு கடலில் கலப்பது போன்று தோன்றுகின்றது. நச்சுப்பொருட்களின் கழிவுகளின் நச்சுத் தன்மையை நீக்கிய பின் தான் இவர்கள் வெளியேற்றுகின்றார்களா?
முன்பெல்லாம் எப்போதாவது ஒரு முறை தான் கடலின் முகம் சிவக்கும். இப்போது அடிக்கடி முகமும்,உடலும் சிவக்கின்றதே? காரணம் என்ன? இவர்கள் வளைத்துப் போட்டுள்ள நிலம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு ஊரையே உள்ளுக்குள் வைக்கும் அளவுக்கு சுற்றி வளைத்துப் போட்டு விட்டனர்.
நட்புடன் தமிழன் திரும்பத் திரும்ப அடித்துக் கூறுவது போல் நம் மக்கள் மத்தியில் விழிபுணர்வு வர வேண்டும். அதற்காக முயற்சிகளை நமதூர் நலன் விரும்பிகள் முன் நின்று நடத்த வேண்டும். இல்லை எனில் வருங்காலத்தில் நம் சந்ததிகள் நம்மை சபிக்கும் நிலை தான் ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்.
9. Re:... posted bySalai s nawas (singapore)[04 November 2012] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 23466
இந்த கண்றாவி காட்சியை பார்க்க நானும் அன்று சென்றுவந்தேன். ஒரு சுற்றுலாத்தலமாக இருக்க வேண்டிய இடத்தை அதுவும் நம்மூர் சொத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்று மன வேதனை அடைந்தேன் . என்ன பண்ண, இதனை வருடமாக கோட்டை விட்டாச்சு. இனியும் விடபோவது இல்லை. அதற்க்கு ஒரு சிலர் மட்டும் முயற்சி செய்து கொண்டு இருந்தால் பலன் கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காது. இது ஒருசிலரின் வேலை என்று மற்றவர்கள் ஒதுங்கி கொண்டால், அழியபோவது எல்லோரும்தான். ஆகவே தயவு செய்து ஒன்று உடலால் பாடுபடுங்கள் அல்லது நிதி உதவி கொடுத்து உதவுங்கள். இதற்க்கு கடற்கரை அல்லது கடை வீதிகளில் உண்டியல் ஏந்திக்கொண்டு வளம் வர தேவை இல்லை, சில நல்ல உள்ளங்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும்.
இந்த மாசுபட்ட தண்ணீரில் என்ன என்ன மாசுக்கள் கலந்து இருக்கின்றன என்பதை ஏற்கனவே CFFC (Cancer Fact Finding Committee) மூலம் சோதித்து பார்த்து எல்லாவற்றையும் இந்திய தூதரகத்தில் சமர்ப்பித்து விட்டாச்சு என்பதயும் அறிய தருகிறேன். அந்த நகல்களை தேவைபடுவோர் என் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். கூடவே நிதி உதவி அளிக்கும் நன்மக்களும் இந்த முகவரியில் தொடர்பு கொண்டால் மற்ற தகவல்கலை அளிக்கிறேன்.
10. Re:...நஞ்சு posted byNIZAR AL (kayalpatnam)[04 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23468
DCW வின் நச்சு கழிவுகளை கடலில் கடந்து கடலின் இயற்கை தன்மையே மாறுகிறது என்றால் மக்களுக்கு எவ்வளவு கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மக்கள் விளங்கவேண்டும். மக்களிடம் இதைப்பற்றி விழ்ப்புணர்வு ஏற்பட தொடர்ந்து இது சம்பந்தமான செய்தியும், புகைப்படமும் தரும் செய்தியாளர் அவர்களுக்கும் மற்றும் அவர்களோடு இணைந்து செயல்படும் அணைத்து சகோதர்களுக்கும் நம் ஊரு மக்கள் அனைவரும் நன்றி சொல்ல கடமைபட்டுளோம்.
இந்த விஷயத்தை ஒரு சிறிய மக்கள் வட்டத்துக்குள் இல்லாமல் அனைவரின் பங்களிப்பை கொண்ட பலம் வாய்ந்த சக்தியான பொது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்ஷால்லாஹ் இதற்கு வெளிநாடு, உள்நாடு காயல் மக்களின் பேராதரவு நிச்சயம் கிடைக்கும். இறைவன் நமக்கு துணைபுரிவானாக ஆமீன்.
12. Re:... posted byummufathima (saudiarabia)[04 November 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23471
எல்லோருக்குமே மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை என்ற எண்ணம் மேலோங்கி நிற்பது தெரிகிறது. dcw பற்றிய செய்திகள் பெரும்பாலும் இணையதளம் மூலம்தான் வெளிவருகிறது. இணையத்தைப் பார்க்காத மக்களும் இது பற்றி அறிந்து கொள்ளும் சூழ்நிலையை சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தவேண்டும்
13. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[04 November 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23481
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல அருமையான >>போட்டோவை தந்த அருமை சகோதரருக்கு எம் பாரட்டுக்கள் ....
நான் ஏற்கனவே எழுதியது போன்று ....... நாம் கண்டிப்பாகவே செய்ய வேண்டிய ஒரு முக்கியமான காரியம் ...நம் ஊர் கேபிள் T.V. -ல் அடிக்கடி ஒளிபரப்ப வேணும் + நம் ஊர் அனைத்து ஜும்மா பிரசங்கதிலும் சொல்லவும் & நோட்டிஸ் மூலமாகவும் ...நம் ஊர் ஆண் / பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேணும் ....தேவை பட்டால் ஆட்டோகள் மூலமாகவும் / நம் பள்ளிகள் ( ஒலிபொரிக்கி ) மூலமாகவும் நாம் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு ..முழுக்கவே இறங்கினால் தான் ...நம் ஊருக்கு நல்லது. இல்லையேல் நம் ஊரின் நிலைமை ரொம்பவும் மோசம்தான் ......
இந்த நாசமா போன >> D.C.W. << தொழிற்சாலையின் கழிவு நீர் போக கூடிய இடத்தில் நாம் எதிர்ப்பு தெரிவித்து ...காபவுண்டு வால் கட்டி ....கடலில் கழிவு நீர் போவதை நாம் தடுத்தால் என்ன ??
பாருங்களேன் மலை கல்லு கூட அதன் மேல் பகுதியில் எப்படி தோண்டுகிறது .....பார்க்கவே நமக்கு பயமாக உள்ளது ....
நாம் எல்லாம் ஓன்று சேராமல் நிச்சயமாகவே ஒன்றும் நடக்கவே ...நடக்காது ...இது உறுதி....
நாம் போராட்டத்தை விரிவாக்கி ....அரசியல் கட்சி மூலமாகவும் ...போராட வேணும் .நம் ஊரில் நன்கு படித்தவர்கள் / நல்ல பொசிசனில் இருப்பவர்கள் / நிறைய அமைப்புகள் .....என்றெல்லாம் இருந்துமா ?? நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் கையை கட்டி கொண்டு இருக்கிறோம் ..........
>>>>>> ஒற்றுமைக்கும் .... நேர்மைக்கும் ....பண்புக்கும் ....காலத்தால் பெயர் வாங்கிய நம் ஊரா ...இப்படி ..மொவ்னம் ...காத்து உள்ளோம் ...படு ஆச்சரியமாகவே உள்ளது ....
நம் ஊர் அனைத்து மக்களாலும் / அனைத்து ஜமாத்துகள் / பொது நல அமைப்புகள் / நம் ஊர் எல்லா அரசியல் கட்சி தலைவர்கள் ......எல்லாம் ஓன்று கூடி ....இந்த >>> நாசமாபோன D. C. W. <<< வை ஒழித்து கட்ட ....தனியாகவே ஒரு மாபெரும் அமைப்பை ஏற்படுத்த வேணும் அப்பத்தான் நம்மால் மக்களை ஓன்று திரட்டி போராட்டத்தை ... வேக .... படுத்த வேணும் .......
உலகம் பூர உள்ள அனைத்து >>>காயல் நற்பணி மன்றகளும் ஓன்று கூடி ...இந்த போராட்டத்துக்கு என்றே தனியாகவே எல்லா உறுப்பினர்களிடமும் .....இஸ்பிசல் ...சந்தா வசூல் பிரித்து ....நாம் புதியதாக ...D.C.W. .....வை எதிர்பதற் என்றே நாம் அமைத்து உள்ள ...புதிய அமைப்புக்கு பணத்தை அனுப்பி கொடுத்து ....நாம் இந்த நாசமா போன >> D.C.W. << வை ஒழித்து ....நம் ஊர் மக்களை காப்பாற்ற வேணும் .....
உலக காயல் நற்பணி மன்றகள் எல்லாம் இந்த விஷயதில் என்னதான் முடிவு எடுக்க போகிறது என்று பார்க்க வேணும்........
நம்மோடு நம் வல்ல நாயனும் துணை நிர்பானாகவும் ஆமீன்....... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross