காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.
கடந்த சில நாட்களாக காயல்பட்டினத்தையொட்டிய கடற்பரப்பு செந்நிறமாகக் காட்சியளித்து வந்த நிலையில், தற்போது ஓரளவுக்கு நிறம் இயல்புக்கு மாறியுள்ளது. 04.11.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 05.25 மணியளவில் பதிவு செய்யப்பட்ட - காயல்பட்டினம் கடலின் காட்சி:-
கடலின் - நவம்பர் 02ஆம் தேதி காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குக!
1. அது என்ன சந்தேக கேள்வி.. அது என்ன இருக்கக் கூடும்... என்ற வார்த்தையை ஏன் நுனைக்கிறீர்கள்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM )[06 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23520
அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.. இது செய்தி...
அது என்ன சந்தேக கேள்வி.. அது என்ன இருக்கக் கூடும்... என்ற வார்த்தையை ஏன் நுனைக்கிறீர்கள்.. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து தான் இரசாயணக் கழிவுகளை கடலுக்குள் திறந்துவிடப்படுகிறது என்று உறுதியாக செய்தி போடவேண்டியது தானே... காரணமாக இருக்கக் கூடும்... காரணமாக இருக்கக் கூடும்... என்ற செய்தி இனி போடாதீர்கள்... இது எனது வேண்டுகோள்... உறுதியான செய்தியை மக்களுக்கு தெரிவிப்பதால் உங்களுக்கு என்ன... இடைஞ்சல்...? அந்த தொழிற்சாலைக்கு நீங்கள் பயமா..?
நான் உறுதியாக சொல்கிறேன் இந்த தொழிற்சாலையின் மூலமாக தான் இரசாயணக் கழிவுகளை கடலுக்குள் திறந்துவிடப்படுகிறது.... என் மீது இந்த நிர்வாகம் இது சந்மந்தமாக அவதூறு வழக்கு பதிவு செய்யட்டும்.... சந்திக்க தயார்.. ? பெயரிட்டு சொல்கிறேன் D C W தொழிற்சாலையின் இரசாயணக் கழிவுகள் காயல்பட்டினம் கடற்கரைக்கு திறந்து விடபடுகிறது... D C W நிர்வாகமே உங்களால் முடிந்தால் என் மீது வழக்கு தொடரலாம்... இதை நான் எதிர்கொள்ள எதிர்பார்க்கிறேன்...
2. Re:... posted bynizam (india)[06 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23527
தமிழா உன் நெஞ்சுறுதியை மனமார பாராட்டுகிறேன். ஆனால் சிறிய மாற்றம் கேஸ் உங்கள் மீது போடவேண்டியதில்லை. நாம்தான் DCW மேல் கேஸ் போடவேண்டும்.
இந்த விசயத்தில் காயல் நல அமைப்புகள், அரசியல் கட்சிகள், ஜமாத்துகள், நேரத்தை வீணாகாமல் உடனே சட்டரீதியாக வழக்கு தொடரவேண்டும். ஏனென்றால் இந்திய சட்ட துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஸ்டர்லைத் ஆலை விஷயமாகட்டும், கூடங்குளம் விஷயமாகட்டும் நீதிபதி சொன்ன ஒரு வார்த்தை சுற்றுப்புற வழக்குகளுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.
அது என்னவெனில் பதினந்தயிரம் கோடி பணத்தை விட மனித உயிர்கள் உயர்ந்தது.
4. Re:... posted bynizam (INDIA)[06 November 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 23535
நவாஸ் காகா உங்களது நய்யாண்டித்தனத்தை சீரிஸ் ஆன விசயத்தில் காட்ட வேண்டாம். நிச்சயம் வல்ல இறைவன் நாடுவான் காயல் மக்கள் தாரளமாக வழங்குவார்கள். இந்த பிரச்சினைக்கு சட்டரீதியாக நிவாரணம் கிடைக்கும் நாள் வெகு தூரமில்லை. அதற்க்கு சாட்சி கூடங்குளம் வழக்கை நடத்தும் பொறியாளர் சுந்தரராஜன் ஒரு நடுத்தர வகுப்பை சார்ந்தவர்.
5. சாளை நவாஸ் அவர்களே... உங்கள் ஆதங்கம் எனக்கு நன்றாகவே விளங்குகிறது... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[06 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23539
சாளை நவாஸ் அவர்களே... உங்கள் ஆதங்கம் எனக்கு நன்றாகவே விளங்குகிறது... கேஸ் போடா CASH வேண்டும் தான்.. உங்களை போல் நல்லுள்ளம் கொண்ட சில பேர்களின் பொருளாதார உதவிகள் இருந்தாலே போதும்... தாரளமாக கேஸ் போடலாம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross