ஒரே முகவரியில் - பல பெயர்களில் சமையல் எரிவாயு இணைப்புகள் இருந்தால் - அம்முகவரியில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் க்குள் KNOW YOUR CUSTOMER (KYC) என்ற படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும் என அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அப்படிவத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக, இந்த KYC படிவம், காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியை நிர்வகித்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினத்தில் கேஸ் சிலிண்டருக்கான விண்ணப்பபடிவம் (K.Y.C.) வருகின்ற 15.11.2012 முதல் மஸ்ஜீதுத் தவ்ஹீத (அலியார்தெருவில்) பெற்றுக்கொள்ளலாம் இது சம்மந்தமாக அச்சம் - அவசரம் கொள்ளத் தேவையில்லை என்றும், ஏற்கனவே எந்த முகவரியில் உங்கள் கேஸ் சிலின்டா் உள்ளதோ அதே முகவரியின் வாக்காளர் அடையாள அட்டையும் ரேஷன் கார்டும் - ஏற்கனவே யாருடைய புகைப்படம் உள்ளதோ அவருடைய ஒரு புகைப்படத்துடன் இணைத்து வருகின்ற கடைசி நாளான 30.12.2012 தேதிக்குள் கொடுத்துக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை தலைவர் ஷம்சுத்தீன் அவர்களை +91 99527 90849 என்ற எண்ணிலோ அல்லது ‘தேக்’ முஜீப் அவர்களை +91 93884 18181 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது @ 21:28 / 02.11.2012] |