ஒரு வீட்டிற்கு ஒரு காஸ் சிலிண்டர் இணைப்புதான் என்ற விதிமுறையை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளவர்கள் அல்லது ஒரே முகவரியில் - கணவன் பெயரிலும், மனைவி பெயரிலும் இணைப்பு வைத்துள்ளவர்கள் - அக்டோபர் 31 க்குள் தங்கள் கூடுதல் இணைப்பை திரும்பி வழங்கவேண்டும் என்றும், அவ்வாறு வழங்காதபட்சத்தில் - அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்படும் என்றும் பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
ஒரே முகவரியில் - பல பெயர்களில் இணைப்புகள் இருந்தால் - அம்முகவரியில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும், அக்டோபர் 31 க்குள் KNOW YOUR CUSTOMER (KYC) என்ற படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அப்படிவத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஸ் இணைப்புகள் வழங்கும் மூன்று நிறுவனங்களும் (INDIAN OIL CORPORATION, BHARAT PETROLEUM, HINDUSTAN PETROLEUM) கால அவகாசத்தை நவம்பர் 15 வரை நீட்டித்துள்ளனர்.
மாதிரி KYC படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும் |