காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.
30.10.2012 செவ்வாய்க்கிழமையன்று காயல்பட்டினம் கடலின் காட்சி:-
கடலின் - அக்டோபர் 29ஆம் தேதி காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குக!
5. Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[31 October 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23328
தம்பி மண்ணின் மைந்தனே ! அது வேற ஒன்னும் இல்லப்பா . சிகப்பு கலரில் இருக்கும் " சங்கரா " மீன் இப்படி கூட்டமா படையெடுத்து வந்து , கடல் தண்ணீரின் கலரையே மாற்றிவிட்டது . நீங்க வேற , இப்படி ஒரேடியா மீனே துன்னாதீங்கன்னு சொன்னா எப்படி .!
DCW ன் இந்த பிரச்சினைக்கு என் மனதில் தோன்றும் சிறந்த வழி, பொதுநல அமைப்புகள் ஒன்றாக இணைந்து வழக்கு தொடருவதுதான். வழக்கு நிச்சயம் உச்ச நீதிமன்றம்வரை செல்லும். முடிவு தெரிய சில வருடங்கள் ஆகும் . பொறுமையுடன் இருக்க வேண்டும். மேலும் பணம் செலவழிக்க வேண்டும். இதற்கெல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும்.
எதற்கும் தயார் என்று மனதில் தோன்றினால் இப்போதே அந்த வேலையை செய்யலாம். ஊரில் உள்ள அத்தனை ஜமாத்துகளிலும் இந்த காரியத்திற்காக அவர்களால் முடிந்த அளவு பண உதவி கேளுங்கள். ஜும்ஆவிலும், கடற்கரையிலும் உண்டியல் வைத்து வசூல் பண்ணலாம். உலக காயல் நல மன்றங்கள் அனைத்தும் தங்களால் முயன்ற அளவு இந்த நல்ல காரியத்திற்கு உதவுங்கள். காலங்கள் கடந்தாலும், தீர்ப்பு நமக்கு சாதகமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
7. Re:... posted byHusain Noorudeen (Abu Dhabi)[31 October 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23334
"அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்" என்ற அச்சப்பாட்டை செய்தி மூலமாக தெரிவித்து இருக்கிறீர்கள்.
ஏன், அதை இப்போதுள்ள கடல் நீரை சோதனை செய்வதன் மூலமாக உறுதி படுத்த முடியாதா? இதை கடற்கரை பயனாளிகள் சங்கமோ அல்லது KEPA வோ முன்முயற்சி எடுத்து சோதனைக்கு அனுப்பி இந்த செந்நிறத்தின் காரணத்தை உறுதிபடுத்தலாமே.
8. When the Kayal sea become Red Sea posted byJahir Hussain VENA (Bahrain)[31 October 2012] IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 23341
"இப்புகார் குறித்து தொழிற்சாலை தரப்பில் கேட்டபோது, "மழையில் அடித்துவரப்பட்டு கடலில்கலக்கும் கழிவுகளால், கடல்நீர், இவ்வாறு நிறம் மாற வாய்ப்பு இருக்கிறது. இதில், எங்கள் மீதான குற்றச்சாட்டு சரியல்ல,' என, தெரிவிக்கப்பட்டது".
Copy and paste from Dinamlar dt 30/10/2012..
Thanks -Dinamalar. & Mr. Mujahid
காயல் பட்டணத்தில் மட்டும் தானா..கழிவுகல் கடல்நீரில் கலக்கிருதா???
அப்படி பார்த்தல் சென்னை கூவம் எங்கே போய் கலக்கிறது??? இன்னும் சென்னை கடற்கரை கலர் மாறவில்லையா???
9. யார் இந்த கொடூர பூனைக்கு மணி காட்டுவது... ? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[31 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23344
தொழிற்சாலையின் முன் ஒரு மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடக்காத வரைக்கும் இதற்க்கு சிறு அளவிலும் மாற்றம் வரவே வராது... நான் இதை உறுதியாக சொல்கிறேன்...!
உள்ளூர் - புறநகர் அணைத்து பொதுநல சங்கங்கள் மற்றும் மீனவர்களை இணைத்து மக்களுக்கு (இதன் நச்சு தன்மையின் ஆபத்தை) விழிப்புணர்வு செய்து KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION (KEPA) சார்பாக ஒரு ஆர்பாட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.. செய்யுங்கள்... மக்களின் ஆதரவு எந்த சதவீதத்தில் விழிப்புணர்வு உள்ளது என்று பார்க்கலாமே...?
காலம் கடந்து... காலம் கடந்து இதை திரும்ப திரும்ப செய்தியாக போடுவதும் அதை மக்கள் படித்து அவரவர் கருத்து பதிவதும் இந்த இணையதளத்தில் வாடிக்கையாகி விட்டது... என்றைக்கு...? இந்த தொழிற்சாலையின் முன் ஆர்ப்பாட்டம் - போராட்டம் என்று செய்திகள் வருமோ...! அன்றைக்கே சிறு மாற்றம் வரலாம்..!
நமது ஊரிலும் சில கருப்பு ஆடுகள் இந்த தொழிற்சாலையின் சுகபோகங்களை அனுபவித்து வருகிறது...! ஆர்பாட்டத்திற்கு இவர்களை அழைக்கும் போது இந்த கருப்பு ஆடுகளை நாம் அடையாளம் காணலாம்...
யார் இந்த கொடூர பூனைக்கு மணி காட்டுவது... ? இதுவே பலரின் சிந்தனையாக உள்ளதாக நினைக்கிறேன்...
தங்களின் இந்த நம் ஊர் கடற்கரையின் போட்டோவை பார்த்ததுமே நம் மனம் ..கொதிப்படைகிறது...& ..துடிக்கிறது .....இப்படியே நாம் சும்மாவது பார்த்து கொண்டு ஒன்றுமே நடவடிக்கை எடுக்காமல் / இணைய தளத்தில் ...பதிவு செய்வதும் / சும்மா பேசி கொண்டும் இருந்தால் ஒன்றும் நடக்கவே நடக்காது......நம் ஊர் மக்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து பண வசூலில் மும்முரமாகவே இறங்கி ..வெளி நாட்டில் & உள் நாட்டில் ..இருப்பவர்கள் எல்லாம் அந்த ஊர் மன்றங்கள் மூலம் இந்த கடற்கரை பிரச்சனைக்கவே ஒரு இஸ்பிசல் சந்தா கொடுத்தும் & நம் ஊரில் இருப்பவர்கள் தங்களின் ஜமாத்து மூலம் சந்தா கொடுத்தும்.....நம் ஊர் அமைப்பான >>> KEPA <<< நிர்வாகத்தின் தலைவர்கள் மூலமாக ...முழு மூச்சாகவே இறங்கவேணும் ....நாம் எல்லாம் இந்த >>> KEPA <<< அமைப்புக்கு பக்கபலமாக இருந்து ...புல் சப்போட்டு பண்ண வேண்டியது......
நாம் யாவர்களும் ஒன்றுமே நடவடிக்கை எடுக்காமல் ...தொட்டுக்கோ ...தொடைத்துக்கோ ....என்று இருந்தால் ...நம் ஊரின் நிலைமை நாளுக்கு நாள் மோசம் தான் அடையும் ....இதில் நமக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை .
நம் ஊர் மக்கள் நம் ஊர் கடற்கரையில் பிடிக்க படும் ...கடல் வாழ் உயிர் இனங்களை ..கொஞ்ச காலத்துக்கு சாப்பிடாமல் இருப்பது நல்லது தான் ......
நம் ஊர் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்த வேணும்.... நம் ஊர் தற்போதைய கடற்கரையின் அவலத்தை ...உள் ஊர் கேபிள் T.V. மூலமாகவும் தெரியபடுத்த வேணும் ....அப்பத்தான் எல்லா பொது மக்களுக்கும் தெரியும் ....இந்த நாசமா போன >>.D.C.W. <<<<<வுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்.
இந்த நச்சு தன்மை கொண்ட நீரை பாருங்களேன் நுரைதள்ளுகிறது & D.C.W. மூலம் வெளிபடுகின்ற நச்சு காற்றாலும் நம் ஊரின் முழு தன்மையும் சுத்தமாகவே கேட்டு போகிறது /
நம் மக்கள் தான் உடல் நலம் பாதிக்கபடுகிறார்கள்...
நம் ஊர் ஜமாத்துக்களும் / பொது நல தொண்டு நிர்வனங்களும் / நம் ஊரில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் / நம் ஊர் பெரும் தலைகளும் / நம் நகர் மன்ற நிர்வாகிகளும்
கூட்டாகவே போராட களம் முழுமையாக இறங்கினால்தான் ......
>> D.C.W. << என்கிற தொழிற்சாலையை அடியோடு இழுத்து மூட நம்மால் கண்டிப்பாக முடியும் .
நம் ஊரில் எவ்வளவோ பேர்கள் படித்து நல்ல ...நல்ல ...பொசிசனில் உலகம் பூராவும் இருக்கிறார்கள் + நாம் உலகம் பூராவும் ...காயல் நற்பணி மன்றங்கள் வேறு வைத்து ...நம் ஊருக்கு தேவையான பல நல்ல ...நல்ல ...காரியங்கள்....மாஷா அல்லாஹ் செய்து வருகிறோம் .....இது போன்ற ஒரு அமைப்பு & ஒற்றுமையும் / செயல் பாடும் வேறு எந்த ஊரிலும் இருப்பதாகவே நமக்கு தெரிய வில்லை ....இதுவே நம் ஊருக்கு கிடைத்த ஒரு மாபெரும் கிப்ட்டு .....இவ்வளவும் நம்மிடம் இருந்துமா ????? நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிக்கிறோம் ...........??நமக்கே மன வருத்தமாகவே உள்ளது .....
வஸ்ஸலாம்.
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
11. Where is polution control department? posted byRiyath (HongKong)[01 November 2012] IP: 171.*.*.* United States | Comment Reference Number: 23352
DCW informed dinamalar media that possiblity of color change in kayal sea is due to the wastage mixing by rain. Complaint to collector with the proof of satelite picture. This incident is happening every year even summer season. Why not our kayal polution control department report this issue to government in right channel as they have more power.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross