கோவில்பட்டி நகரில் நடைபெற்ற டிவிஷனல் கால்பந்து இறுதிப்போட்டியில், பாளையங்கோட்டை புனித சேவியர் பள்ளி அணியை எதிர்த்து காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி விளையாடியது. போட்டியின் இறுதியில், 3-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றிபெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது.
இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், மாநில அளவில் நடைபெறும் போட்டியில் விளையாட எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் விளையாட தகுதிபெற்றுள்ள எல்.கே.மேனிலைப்பள்ளி அணியை, அப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம், ஜமால் ஆகியோர் பாராட்டினர்.
தகவல்:
ஹிட்லர் M.சதக்
படம்:
ஹாஃபிழ் ஸல்மான் ஃபாரிஸ் (யான்பு) |