பெருநாட்கள் மற்றும அவற்றையொட்டிய ஓரிரு நாட்களுக்கு காயல்பட்டினம் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
காயல்பட்டினத்தில் 27.10.2012 அன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டதையடுத்து, அன்று மாலையிலும், அடுத்த நாளிலும் மக்கள் திரண்டிருந்தனர்.
28.10.2012 அன்று கடற்கரையில் மக்கள் திரண்டிருக்கையில், இரவு 07.35 மணியவில் திடீரென பெருந்துளிகளுடன் மழை பெய்தது. இதனால், அங்கு திரண்டிருந்த மக்கள் ஒதுங்குமிடம் தேடி ஓடோடிச் சென்றனர்.
பெரும்பாலானோர், கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையிடப்பட்ட இரண்டு மண்டபங்களிலும் தஞ்சமடைந்தனர்.
சில மணித்துளிகளில் மழை நின்றதையடுத்து, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவரும் தமதில்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
சென்ற ஆண்டும், ஹஜ் பெருநாளையொட்டி கடற்கரையில் மக்கள் திரண்டிருக்கையில் இதுபோன்று திடீர் மழை பெய்ததும், மக்கள் ஓட்டமெடுத்ததும் குறிப்பிடத்தக்கது. |