சீன நாட்டில் 26.10.2012 வெள்ளிக்கிழமையன்று (நேற்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் குவாங் ஸூ நகரில், நபித்தோழர் ஸஃதிப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் கட்டப்பட்ட பெரிய மினாரா அமைந்துள்ளதாகக் கருதப்படும் - பழமைவாய்ந்த குவாங் டாலூ பள்ளிவாசலில் நேற்று காலை 08.00 மணிக்கு பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து குத்பா பேருரையும் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் சில காயலர்கள் உட்பட - தமிழ் பேசும் முஸ்லிம்கள், அரபு முஸ்லிம்கள், சீன முஸ்லிம்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், காயலர்கள் ஒன்றுகூடிய காட்சிகள் பின்வருமாறு:-
தகவல் & படங்கள்:
M.S.அப்துல் அஜீஸ்
குவாங் ஸு - சீனா
[செய்தி திருத்தப்பட்டது @ 23:11 / 27.10.2012] |