தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பாக நகரில் இன்று (அக்டோபர் 27) பெருநாள் தொழுகை நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பாக நகரில் இன்று (சனிக்கிழமை; 27-10-2012) காலை 7.45 மணியளவில், நமதூர் கடற்கரையில், ஹஜ் பெருநாள் தொழுகையையும், அதை தொடர்ந்து பெருநாள் உரையும் நடைபெற்றது. பெருநாள் உரையினை மஜ்ஸீத் தவ்ஹீத் பள்ளியின் தலைமை கத்தீப் சகோதரர் அப்துல்மஜீத் உமரி அவர்கள் வழங்கினார்கள். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர். பெண்களுக்கு வழக்கம்போல் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மழையாக இருக்கும் பட்சத்தில் மாற்று வழியாக L.K.மெட்ரிகுலேஷன் பள்ளியில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்தது. காலை 7.15 மணி வரை மழை இல்லாததால், கடற்கரையில் தொழுகையை நடத்திடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 7.25 மணியளவில் மழை சாரலுடன் வந்தது. மக்கள் அனைவரும் இபுராஹீம் (நபி) அவர்கள் செய்த தியாகத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் கொட்டும் மழை ஒரு பொருட்டல்ல என்று கருதி ஆர்வத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் திடலுக்கு வந்து கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிகள் அனைத்தும் இறைவனின் திருப்பெயரால் இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லா.
ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்ட ஹஜ் பெருநாள் திடலில் மொத்தம் ரூ. 37,753 இரு சாராரிடமும் வசூலிக்கப்பட்டது.
தகவல்:
மஸ்ஜிதுத் தவ்ஹீத்,
233, அலியார் தெரு, காயல்பட்டினம்.
|