காயல்பட்டினம் சுலைமான் நகர் என்ற மாட்டுக்குளத்தில் முதல் தெருவிலுள்ள ஒரு வீட்டில் இன்று காலை 10.00 மணியவில், நகராட்சியின் முன்னனுமதி எதுவும் பெறாத நிலையில் புதிய குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது.
பின்னர், அப்பகுதியை உள்ளடக்கிய 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா, நகராட்சியில் முறையிட்டதையடுத்து, அங்கு வந்த நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், உடனடியாக அக்குழியை மூடுமாறும், அனுமதி பெறாமல் எந்த இணைப்பும் கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டதையடுத்து, பணிகள் நிறைவேற்றப்படாமல் பள்ளம் மூடப்பட்டது.
பின்னர் நம்மிடம் பேசிய பொருத்துநர், அனுமதியின்றி குடிநீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டப்படுவது தனக்குத் தெரியாது என்றும், தகவல் கிடைத்தவுடன் அங்கு வந்து பார்த்து மேல் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். |