இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் கூட்டத்தில், “மணிச்சுடர்” நாளிதழ் முகவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது..
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் கூட்டம் 19.10.2012 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள நகர முஸ்லிம் லீக் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில், நகரத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கூட்டத் தலைவர் தலைமையுரையாற்றினார்.
கடந்த 04.10.2012 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மணிச்சுடர் நாளிதழ் 25ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாவின்போது, மணிச்சுடருக்காக உழைத்தோரைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் நகரின் மணிச்சுடர் நாளிதழ் முகவர் திரு. வியாகப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசை, நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அவர்கள் இக்கூட்டத்தின்போது அவரிடம் வழங்கி, சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தியதோடு, அவரது சேவையைப் பாராட்டிப் பேசினார்.
ஆர்.பி.ஷம்சுத்தீன் அவர்கள் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், ஹாஜி எஸ்.டி.கமால், ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
A.K.முஹம்மத் இம்ரான் |