நடப்பு வடகிழக்குப் பருவமழையையொட்டி காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் தாழ்வான பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
தேங்கிய மழை நீரை வெட்டி, கடலுக்கு அனுப்புவதற்காக காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, நகரின் வடக்குப் புறங்களில் தேங்கியிருந்த மழை நீர் நேற்று காலை 10.30 மணியளவில், பொக்லைன் இயந்திரம் மூலம் காயல்பட்டினம் கடற்கரை கீரிக்குளம் வழியாக வெட்டி விடப்பட்டுள்ளது.
இப்பணிகளை, கீழ நெய்னார் தெரு - கற்புடையார் பள்ளி வட்டம் - தீவுத்தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணி மேற்பார்வையிட்டார்.
இந்நடவடிக்கை காரணமாக, காயல்பட்டினம் நெய்னார் தெரு, கீழ நெய்னார் தெரு, கற்புடையார் பள்ளி வட்டம், தீவுத்தெரு ஆகிய பகுதிகளின் மழைநீர் தேக்கங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.
களத்தொகுப்பில் உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய் |