இயற்கை தனது அருட்கொடையை மழை வடிவில் கடலிலும்
கரையிலும் பொழிகின்றது.
ஆனால் DCW
தொழிற்சாலையோ தனது கொள்ளை
ஆதாயத்திற்காக நிலம் , நீர் , வானம் என அனைத்தையும்
நஞ்சாக்கி பாழ்படுத்துகின்றது.
மீன்கள் , நிலத்தடி நீர் , காற்று , மனிதர்கள் உட்பட எவர்
இருந்தாலும் சரி தொலைந்தாலும் சரி என் கல்லா பெட்டியில்
காசு நிறைந்தால் சரி என்கின்ற DCW இன்
வெறித்தனத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கூடன் குளம் , இடிந்த கரை மக்களின் போராட்ட வடிவங்கள் நம்
கண்களை திறக்கட்டும்.
வழமை போல் மீண்டும் .........என்று தலைப்பை இழுத்து போட்டிருப்பதை பார்த்த உடன் இன்று ஒழுங்கா நடந்து கொண்டிருக்கும் நகராட்சி பற்றி தான் செய்தியா என்று நினைத்து ...உள்ளே பார்த்தால் DCW விசமிகளின் விளையாட்டு தொடங்கி விட்டது!! இதற்கு ஒரு விடிவே கிடையாதா .. எதற்காகவெல்லாம் கொடி பிடிக்கும் அரசியல் கட்சிகள் இதற்கு ஒருநாளாவது கொடி பிடிப்பார்களா? கூடங்குளம் திறக்க வேண்டும் என்று கடையடைப்பு செய்த கட்சியினர் இதற்கு ஒரு ஆர்பாட்டமாவது நடத்துவார்களா?
6. Re:...நிறமாற்றம் posted byNIZAR AL (kayalpatnam)[23 October 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23011
இந்த கடலின் நிறமாற்றம் இன்று நேற்று நடக்கும் சம்பவம் அல்ல, கடற்கரை பகுதியில் வசிக்கும் அனைவருக்குமே தெரியும் இது பல வருடங்களாக இருக்கிறது.
நாங்கள் சிறு வயதில் இது போல ஏற்படும் நிற மற்றதை பெரியவர்களிடம் கேட்போம், அவர்கள் ஏதோ கெமிக்களில் காஸ் திறந்துவிட்டதனால் இப்படி நிறம் மாறி உள்ளதாக சொல்வார்கள், உண்மையில் இது தான் நம்ம ஊரு மக்களின் எதார்த்தமான பேச்சாக இருந்தது. அனால் இன்று வரை இது தொடர்கதையாக உள்ளது. எனவேதான் செய்தியை தந்தவர் வழமை என்று சரியாக போட்டுள்ளார்.
இந்த நிறமாற்றம் DCW களிவில்தான் ஏற்படுகிறதா? இது உறுதிப்படுத்தப்பட்டதா? மக்களுக்கு தெரியவில்லை என்றே சொல்லலாம்.
என்ன கழிவு கலக்கபடுகிறது அதனால் ஏற்படும் விளைவுகள் என்பன பற்றிய விழுப்புணர்வு இன்னும் மக்களிடம் இல்லை. சில பேர் மனதிலே முனுமுனுப்பதால் என்ன பண்ண முடியும். இதற்கு சரியான தீர்வை அடைவதற்கு நம்ம ஊரு மக்கள் அனைவரும் ஒரு சேர்ந்து இதைப்பற்றி தீர்க்க ஆராய்ந்து நல்ல முடிவை, செயல் திட்டத்தை உருவாக்குவதுதான் சிறந்ததாக இருக்கும்,
ஆனால் இவ்விசயத்தில் இன்ஷா அல்லாஹ் நம்ம ஊரு மக்கள் பேராதரவை தருவார்கள் என்பது நிச்சயம், என்று துவங்கும் என்பதுதான் தெரியவில்லை. இறைவன் நாடினால் விரைவில் ,
யா அல்லா.......பொது மக்களுக்கு ரொம்பவும் விரோதமான இந்த நாசமா போன D.C.W. தொழிற்சாலையை இழுத்து மூட வழி செய்வாயாக.......
என்ன ஒரு அழகான கடற்கரை .....எங்கிருந்து எல்லாம் நம் ஊர் கடற்கரையை ரசிக்கவும் ...... சின்ன ...சிறுசுகள் ....படு ஜாலியாகவும் குளித்து மகிழவும் வருகிறார்கள் ......அப்படி இருக்க ....இந்த கேடுகெட்ட D.C.W. தொழிற்சாலையில் இருந்து வருகின்ற நச்சு தன்மை உள்ள கழிவு நீர் ...இயற்கையான கடல் தண்ணீரில் கலந்து ....அதன் கலரே மாறி விடுகிறது ....என்றால் நாம் பார்க்கவேணும்....எவ்வளவு மோசமான நச்சு தன்மை உள்ள கழிவு நீராக இது இருக்கும் ??
நம் ஊர் மக்களுக்கு ஒரு விடிவு காலம் ....எப்போது தான் வருமோ ???? நம் போராட்டம் ஒன்றும் தமிழக அரசின் பார்வைக்கு சரியாக போக வில்லை ...என்று தான் அர்த்தம் ....நம் ஊர் பொது நல அமைப்புகள் / ஜமாத்துகள் எல்லாம் இந்த ஒரு விசியத்தில் முழு ஒற்றுமையாக இருந்து கடுமையாகவே செயல் பட்டால் தான்.....நாம் முழு வெற்றி பெற்று. இந்த நாசமா போன D.C.W. தொழிற்சாலையை அடியோடு இழுத்து மூட முடியும் ......
எப்படி """" கூடங்குளம் """ பொது மக்கள் எல்லோர்களும் ஒன்றாகவே சேர்ந்து ரோடு வரை வந்து முழுமையாக ஒற்றுமையுடன் போராடுகிறார்கள்.... அது போல் நாமும் ஒன்றாகவே ரோடு வரை வந்து முழுமையாகவே போராடினால் தான் வெற்றி பெற முடியும்........ இல்லை எனில் நம் ஊர் நிலைமை இப்படி தான் இருக்கும் .......
நம் ஒற்றுமையில் தான் நம் பலமே உள்ளது .....
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross