Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[21 October 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22952
மழை வந்ததாலே இந்த செய்திகள் தான்.
அங்கு தண்ணீர் கட்டிவிட்டது, இங்கு முட்டுவரை தண்ணீர், அவர்கள் வந்து பார்வை இட்டார்கள், மோட்டார் கொண்டு தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது, நெட்டில் போட்டோவுடன் செய்திகள், அதற்க்கு கமெண்ட்ஸ், அப்புறம் மறந்து விடும் அனைத்து நிகழ்வுகளும், அடுத்த மழை வரும் வரை.
விடிவு காலம் எல்லாம் வரவே வராது. நல்ல வெயில் அடித்து, பல மாதங்கள் கழித்து தான் இந்த சகதி தண்ணீருக்கு விடிவு வரும்.
யாரை குற்றம் சொல்லுவது...!
வீடு அப்படி கட்டுங்க, ரோடு போடும் போது மழை நீர் தேங்காத மாதிரி போடுங்க.. சரி. அப்படியே போட்டு விடலாம். இந்த மழை நீர் கடைசியில் எங்கு சென்றடையும்..!
வல்ல ரஹ்மான் இந்த பூமியில் ஆங்காங்கே குளங்கள், ஆறுகள், குட்டைகள் என்று படைத்து, வெல் ப்ரோக்ராம் பண்ணி வைத்துள்ளான். நாம் அதை ஆக்கரமித்து, பிளாட் போட்டு, வீடு கட்டி விட்டோம். அப்புறம் தண்ணீர் கட்டுகிறது என்று அங்கு முறையீடு, இங்கு மறியல் என்று சொல்லுவது வேடிக்கை தான்.
** நான் சிறுவனாக இருந்த சமயம், கலர் கலராக பிளாஸ்டிக் பேப்பரில் கப்பல்கள் செய்து, எங்கள் தெருவில், மழை நீரில் அனுப்புவோம். அடுத்த நாள் "தரவைக்குளம்" சென்று பார்த்தால், நாங்கள் லான்ஞ்சு பண்ணின அனைத்து கப்பல்களும் தரை தட்டி, தலை குப்புற கிடக்கும். அவற்றை கலக்ட் பண்ணி எண்ணிப்பார்த்தால் நாங்கள் அனுப்பின கப்பல்களின் எண்ணிக்கை சரியாக இருக்கும்.
இன்றோ.. கப்பல்களும் இல்லை, ஒரு குளங்களும் இல்லை. அப்படியே கப்பல் செய்து விட்டால், அடுத்த வீட்டு படி வரைக்கு கூட செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது.
ஆக, ஆண்டவனின் பிரோக்ராமில் டிஸ்டர்ப் பண்ணினால், அனுபவிக்க வேண்டியது தான்.
சோ..காணமல் போன குளங்களை மீட்டால் தான் விடிவு காலம் வரும்... அது சாத்தியமா..!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross