காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ...? posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[23 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23003
தாமரை ஸ்கூலுக்கு ஒரு பகுல்(பவுல்) பெரிய ஸ்கூலுக்கு சுடலை அண்ணன்! மூன்று தலை முறைகளைக் கண்ட புன்னியவான்! சபியா கம்மாவின் வாய் துடுக்கில் சுடலை அண்ணன் சூடாவது சுவரசியமாக இருக்கும்.திரு ஞானய்யாவுக்கு மட்டுமல்ல மூச்சுக்கு முந்நூறு தடவை எல்.கே. அப்பா சுடலையைத் தான் அழைப்பார்கள்.அப்பா அவர்களின் வலக்கரமாக செயல்பட்டவர்.
பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத சிலர் அதில் அமரர் சுடலை அண்ணனும் ஒருவர். நெட்டை கொக்கு வாத்தியார் ஒன்னும்... ஒன்னும் ரெண்டு,
இரவுப்பாட சீட்டில் தூங்கிக் கொண்டே கையெழுத்து போடும் கம்சா மெய்தீன் சார்
மிருதங்கம் வாசிக்கும் அப்பன் சார்
ஆர்மோனியப் பெட்டி எஸ்போன் சார்
வேஷ்ட்டியை பின் புறமாக சற்று உயர்த்திகைகட்டி நிற்கும் தங்கராஜ் சார்
இசைப்பிரியர் ஹெட் மாஸ்ட்டர்-தங்க பாண்டி சார்
என்றும் இளமை ஹல்லாஜி சார்
எம்ஜிஆர் அனுதாபி அலாவுத்தீன் சார்
நாக்கை கடித்து நச்சுன்னு போடுற நெய்னா முகம்மது சார்
தேனாய் தீம்பழமாய் எனும் செய்யுளை மூச்சுவிடாமல் படிக்கும் ஜோசப் சார்
ஆங்..ஆங்.. லைனாப் போ... கோல்ட்ராஜ் சார்
டொட்டொடைங்.... நாராயணன் சார்
ஏலெ! இந்தமடமில்லைன்னா சந்தமடம்.. விளங்காப் பயயுள்ளைகளா.. உங்களுக்கு பாடம் நடத்துறதுக்கு நாலு கழுதைக்கு பாடம் நடத்தினால் அது படிச்சு பாசாகும்லெ என கணக்கு வழக்கின்றி எழுதிப் போடும் கண்ணன் சார்
நெற்றியில் சிவப்பு நிறத்தில் மெல்லிய கோடு போட்டு வரும் அறிவியல் ஆசான் ராமன் சார்
தனது கரத்தால் மொத்து மொத்துன்னு மொத்தும் (வரலாறு & புவியியல்) செய்லா சார்
ஒரே எக்ஸர்சைஸ்ன்னு உயிரை எடுக்கும் ஷாஹுல் ஹமீது சார்
சைலண்ட் என அமைதி படுத்துக் கிங்ஸ்லி சார்
கதை கதையா புருடா விடும் கிராஃப்ட் சார்
ஆபீஸ் ரூம்லெயே கிடையா கிடப்பாரே அந்த நெட்டையான மனிதர் (ரைட்டர்) சார்
இன்னும் எங்கள் சீனியர்களுக்கு பாடம் நடத்தி படாதபாடுபட்ட பல ஆசிரிய பெருமக்களின் நினைவுகள் வரும் போதெல்லாம் நமது சுடலை அண்ணாச்சியின் நினைவும் இனி கூட வரும் என்பதில் சந்தேகமில்லை!
இவரின் மறைவு பலரது மலரும் நினைவுக்கு வழி வகுத்திருப்பது வருகின்ற கமெண்ட்ஸ் மூலம் மிகத் துல்லியமாகத் தெளிவாகின்றது.
எல்லா ஆன்மாக்களும் ஒரு நாள் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்! இது கால விதி! ஆனால் அவர் எப்படி வாழ்ந்தார்? என்பது மட்டுமே அவர் காலத்திற்குப் பிறகும் மக்களால் பேசப்படும். வந்திருக்கும் ஒட்டு மொத்த கருத்துப்பதிவுகளையும் பிரிண்ட் எடுத்து சுடலை அண்ணாச்சி வீட்டார்க்கு சமர்பிக்கவும். அதைப் பார்த்தாவது அவர்கள் சற்று ஆறுதல் அடையக்கூடும்.
கனத்த மனதோடு,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross