Re:...நிறமாற்றம் posted byNIZAR AL (kayalpatnam)[23 October 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23011
இந்த கடலின் நிறமாற்றம் இன்று நேற்று நடக்கும் சம்பவம் அல்ல, கடற்கரை பகுதியில் வசிக்கும் அனைவருக்குமே தெரியும் இது பல வருடங்களாக இருக்கிறது.
நாங்கள் சிறு வயதில் இது போல ஏற்படும் நிற மற்றதை பெரியவர்களிடம் கேட்போம், அவர்கள் ஏதோ கெமிக்களில் காஸ் திறந்துவிட்டதனால் இப்படி நிறம் மாறி உள்ளதாக சொல்வார்கள், உண்மையில் இது தான் நம்ம ஊரு மக்களின் எதார்த்தமான பேச்சாக இருந்தது. அனால் இன்று வரை இது தொடர்கதையாக உள்ளது. எனவேதான் செய்தியை தந்தவர் வழமை என்று சரியாக போட்டுள்ளார்.
இந்த நிறமாற்றம் DCW களிவில்தான் ஏற்படுகிறதா? இது உறுதிப்படுத்தப்பட்டதா? மக்களுக்கு தெரியவில்லை என்றே சொல்லலாம்.
என்ன கழிவு கலக்கபடுகிறது அதனால் ஏற்படும் விளைவுகள் என்பன பற்றிய விழுப்புணர்வு இன்னும் மக்களிடம் இல்லை. சில பேர் மனதிலே முனுமுனுப்பதால் என்ன பண்ண முடியும். இதற்கு சரியான தீர்வை அடைவதற்கு நம்ம ஊரு மக்கள் அனைவரும் ஒரு சேர்ந்து இதைப்பற்றி தீர்க்க ஆராய்ந்து நல்ல முடிவை, செயல் திட்டத்தை உருவாக்குவதுதான் சிறந்ததாக இருக்கும்,
ஆனால் இவ்விசயத்தில் இன்ஷா அல்லாஹ் நம்ம ஊரு மக்கள் பேராதரவை தருவார்கள் என்பது நிச்சயம், என்று துவங்கும் என்பதுதான் தெரியவில்லை. இறைவன் நாடினால் விரைவில் ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross