Re:...என்னதான் சிரிப்பும் செழிப்பும் நிறைந்து இருந்தாலும்... posted bymackie noohuthambi (kayalpatnam)[27 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23128
என்னதான் சிரிப்பும் செழிப்பும் முகத்தில் நிறைந்து காணப்பட்டாலும். சிலரின் உள்ளங்களில் படர்ந்து நிற்கும் சோகமும் ஏக்கமும் நிழல் பட சுருளுக்குள் நுழையமுடியாது.
அரபா தினம் முதல் பெருநாள் முடியும் வரை அந்த மூன்று நாட்கள் பெருநாளுக்கு பின்னால் வர வேண்டிய அய்யாமு தஷ்ரீகாக வந்து உள்ளங்களை அலைக்கழிக்கிறது. உம்மா வாப்பா ஒரு நாள் பெருநாள், மகள் மருமகன் இன்னொருநாள், மகன் மருமகள் வேறு ஒருநாள்...
கணவன் ஊரில் இருக்கும்போது மனைவி கணவனின் உத்தரவு இல்லாமல் சுன்னத்தான நோன்பு பிடிக்க கூடாது என்ற நபி மொழி எல்லோருக்கும் தெரிந்திருக்க அந்த சுன்னத்தான நோன்பே நான் சொல்கின்ற நாளில் நான் பிடிக்கின்ற நாளில்தான் நீயும் பிடிக்கவேண்டும் என்று கணவன் மனைவி மீது அழுத்தம் கொடுக்கிறான். வீட்டில் உள்ளவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்று தோற்றுப்போகிறார்கள். அவர்கள் நோன்புபிடிக்க பெற்றோர் உண்டு உறங்க.... பெற்றோர் நோன்பு பிடிக்க கணவன் மனைவி உண்டு மகிழ....... கனத்த இதயத்துடன் பெற்றோரை மகள் சந்திக்க, தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வுடன் மருமகன் கை பிசைந்து நிற்க..... அந்த பெருநாள் வெறும் நாளாக மரண வீட்டில் ஒரு முராரி ராகமாக மன இறுக்கத்துடன் விடை பெற்று செல்கிறது.
உலக மக்களையே இணைத்து வைக்க வந்த குர் ஆன் ஹதீஸ் அதன் சொந்தக்காரர்களலேயே வெள்ளாட்டுக்கு இரையாகிற அவல நிலை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தனது அந்திம காலத்திலும் இந்த உம்மத்துக்கு தனக்கு ஏற்பட்டுள்ள சக்ராத் வேதனை ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்ட காருண்ய நபியின் பெயரால், எத்தனையோ சுன்னத்தான அமல்கள் நம் கண் முன்னாலே கண்டுகொள்ளப்படாமல். சுன்னத்துதானே என்று அலட்சியமாக ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்த சுன்னத்தான நோன்பும் பெருநாளும் நமக்கிடையே பிரிவினை ஏற்படுத்தும் காரணிகளாக மாறிய காரணம் என்ன? எங்கே தவறு நடக்கிறது, சகோதர்களே, கொஞ்சம் சிந்தியுங்கள்.
ஒற்றுமையின் பாதை பரந்து கிடக்கிறது ஆனால் அது வெகு தூரம் நம்மை விட்டு விலகி இருக்கிறது. வேற்றுமையின் பாதை கரடு முரடானது, குறுகலானது.. ஆனால் அது நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது, தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறது. நாம் எதை தேர்ந்தெடுப்பது. புரியாத புதிராக இருக்கிறது.
அல்லாஹ் ஒருவனே உள்ளங்களை இணைக்கக்கூடியவன். அவனிடமே இரு கரம் ஏந்தி து ஆ கேட்போம். நீர் வெட்டி நீர் பிரிவதில்லை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross