நிர்வாகமே! குற்றம் புரிந்தவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா ?. posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[27 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23156
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கள்ளத் தனமாக குடிநீர் இணைப்புக் கொடுக்க முயன்றது தடுக்கப்பட்டிருக்கிறது - இது மக்களின் விழிப்புணர்வுக்கு ஒரு சான்று.
இது போன்று மக்கள் எல்லா நேரமும் விழிப்புணர்வுடன் இருந்தால் - மக்களும், மன்றமும் ஏமாற்றப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
---------------------------------
மக்களே!
நமது நகராட்சியில் அதிகாரப்பூர்வமாக 8200 குடிநீர் இணைப்புகள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சுமார் 4000 குடிநீர் இணைப்புகள் அதிகாரப்பூர்வமற்றதாக கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை உறுதியாக இருக்கக்கூடும் என்பதற்கு இந்த நிகழ்வே ஓர் எடுத்துக்காட்டு.
நகராட்சி அதிகாரியின் உத்தரவின்றி இணைப்பு கொடுப்பதற்காக குழி தோண்டினால் எத்தனை ரூபாய் அபராதம் விதிக்கப்படும் மேலும் எத்தனை மாதம் சிறை தண்டனை கிடைக்கும் என்பது தோண்டியவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
தெரிந்தும் அவர் குடிநீர் இணைப்பிற்காக தோண்டினார் என்றால் இது கூட்டு சதியாகவேதான் இருக்கும். எனவே இது போன்று அவர் எத்தனை குழிகள் தோண்டினார் என்பதை நகராட்சி நிர்வாகம் விசாரித்து , அனைத்து முறையற்ற குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்க வேண்டும். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
---------------------------------------
உடனடியாக அந்த குழியை மூடுமாறும் , அனுமதி பெறாமல் எந்த இணைப்பும் கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டால் மட்டும் போதாது. அந்த தவறை செய்தவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்கு நகராட்சி நிர்வாகத்தினரும் உடந்தை என்பதே தீர்ப்பாகும்.
நகராட்சி நிர்வாகமே! குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து , தண்டிப்பீர்களா ?.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross