செய்தி: “இவரைப்போல் நீங்களும் சாதிக்கலாமே...?” KCGC நடத்திய மாணவர் ஊக்குவிப்பு கருத்தரங்கில் உள்ளூர் சாதனையாளர் இப்றாஹீம் ஊக்க உரை! திரளான மாணவ-மாணவியர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..வெற்றித் திருமகன் posted bymackie noohuthambi (kayalpatnam)[28 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23213
HATS OFF MR MUHAMMAD IBRAHIM. KEEP IT UP.
FROM THE HUTS OF A SMALL VILLAGE OF RAMESWARAM TO HIGH FLATS OF RASHTRAPATHI BHAVAN......
ஒரு சாதாரண குடிமகன் ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்ட்ரபதி பவனுக்கு ஒரு முதல் குடிமகனாக அப்துல் கலாம் சென்றார்.
FROM THE FLICKER OF A LAMP IN A SMALL BENGAL VILLAGE TO THE CHANDELIERS OF DELHI ஒரு சிறு விளக்கின் குமிழ் சிந்தும் சாதாரண வங்க கிராமத்திலிருந்து டில்லி மாநகரத்தின் உயர்ந்த ஒளி சிந்தும் அலங்கார விளக்கின் உயரத்துக்கு ஒரு முதல் குடிமகனாக பிரணாப் முகெர்ஜி சென்றார்.
FROM THE DOWN TRODDEN CORNER OF THE KAYALPATNAM VILLAGE IN THE SOUTHERN TIP OF INDIA TO HONEYWELL OF THE UNITED STATES OF AMERICA. இந்தியாவின் தென் முனையில் உள்ளகாயல்பட்டினம் கிராமத்தின் ஒரு மூலையில் இருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் " தேன் கிணற்றில்"(honeywell ) நீந்தி வரும் ஒரு இளையமகனாக ஏற்றம் பெற்று நமதூருக்கு பெருமை சேர்த்து தந்திருக்கிறார் முஹம்மது முஹியிதீன்.அல்ஹம்து லில்லாஹ்.
THERE IS NO SUBSTITUTE TO HARD WORK.......CHOICE FIRST CHANCE NEXT....COMMUNICATION AND ASPIRATION VERY IMPORTANT FOR INNOVATIONS AND INVENTIONS .
இப்படி பல கோணங்களில் தன் வெற்றியின் ரகசியங்களை புன்முறுவலுடன் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட வெற்றி திருமகனின் பாங்கு வியக்க வைத்தது. பார் சிறுத்தலின் படை பெருத்ததோ அன்றி படை பெருத்தலின் பார் சிறுத்ததோ என்பது போல், அவர் கலந்துரையாடிய அறை சிறிதாக இருந்ததால் கூட்டம் பெரிதாக தெரிந்ததா அல்லது கூட்டம் பெரிதாக இருந்ததால் அறை சிறிதாக தெரிந்ததா என்று வியக்கும் அளவுக்கு மாணவ மாணவிகள் குவிந்து இருந்ததை பார்க்க முடிந்தது.
"மாற்று திறனாளி" என்ற நிலையிலிருந்து எதையும்" மாற்றும் திறனாளியாக" தன்னை உயர்த்திக்கொண்ட வழக்கறிஞர் அவர்களின் அறிமுக உரை மெய் சிலிர்க்க வைத்தது. ஆனால் சிறியவயதில் இத்தனை சாதனை புரிந்துள்ள இந்த மண்ணின் மைந்தனை பாராட்ட ஒரு திறந்த வெளி மைதானத்தில் ஊர் திரண்டு வந்து விழா எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது
.மகாத்மா காந்தி அவர்களுக்கு தேச தந்தை என்ற பட்டம் எப்போது கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு விடை தெரியுமா? அப்படி ஒரு பட்டமே அவருக்கு இந்த அரசு கொடுக்கவுமில்லை அப்படி ஒரு பட்டம் கொடுக்க இந்திய அரசியல் சட்டத்தில் இடமும் இல்லை. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அரசு கொடுத்த பதில் இது. எனவே நாம் இவருக்கு ஒரு பட்டம் கொடுத்தால் அதுவே அவருக்கு வாழ்த்தாக அமையும்.
" வெற்றி திருமகன்" ......என்று அவரை அழைப்பது பொருத்தம் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.......அவரை மேடை ஏற்றி அறிமுகம் செய்த காயல்பட்டினம் சென்னை வழி காட்டு குழுவுக்கும் வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross