’’தோன்றின் புகழோடு தோன்றுக’’!!! posted byMohamed Rafeeq (Holy Makkah)[18 January 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2323
’’தோன்றின் புகழோடு தோன்றுக’’என்னும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் நம் எஸ்.கே.அவர்கள்.
தாமரையின் இதழுக்குள் தித்திக்கும் தேன் இருப்பதை உடன் வாழும் (மண்டூகம்)தவளைக்குத் தெரியாது. கானகதிலிருந்து பறந்து வரும் வண்டுக்குத்தான் அதன் அருமை புரியும் அது போல அன்னாரின் திறமையும்,பெருமையும், பிற ஊர், பிற மாநிலம், பிற நாட்டவர்க்கே தெரிந்துள்ளதால்தான் காயல்பட்டணம்.காமில் எஸ்.கே. அவர்களைப் பற்றிய கமண்ட் மழை பொழிந்து கொண்டேயிருக்கிறது.
அவர் வாழ்ந்து கொண்டிருந்தபோது அறியாத நமதூர் மக்கள் பலரும் அவர் மறைந்த பின்தான், "அட! இப்படி ஒரு மனிதர் நமதூரிலா இருந்தார்கள்?" என வியந்து போயினர்.
அதற்கு ஓர் உதாரணம் அவர்களின் சொந்த மகளே, இங்கிலாந்திலிருந்து அனுப்பிய செய்தியில், தம் தந்தையைப் பற்றி குறிப்பிடுகயில், “வைரத்தின் மதிப்பை மண்ணுக்குள் தொல்லைத்த பின்னரே நாங்கள் அறிந்து கொண்டோம்” எனக் குறிப்பிடுள்ளதை நான் நினைவு கூர்கின்றேன்.
அன்னவரின் வாழ்க்கை குறிப்பை ஓர் நூலாக வெளியிடலாம். அவர் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள் யாரேனும் முன் வருவார்களா? குறிப்பாக அவரது வாரிசுகளின் அனுமதியோடு... வல்ல நாயன் அதற்கு துணை செய்வானாக!ஆமீன்.
என்றும் அன்புடன்,
M.N.L.முஹம்மது ரஃபீக்,
புனித மக்கா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross