Re:...பாண்டியன் எக்ஸ்பிரஸ் posted byNIZAR AL (kayalpatnam)[29 October 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 23266
நெல்லை பாண்டியன் எக்ஸ்பிரஸ் அமீரக காயல் சுற்றுலா புகைப்படங்கள், நிகழ்வுகளை பார்க்கும்பொழுது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது, ஊரில் கிடைக்காத இந்த சந்தோசங்கள் வளைகுடாவில் கிடைப்பது வரப்பிரசாதமே.
இந்த சுற்றுலாவில் வந்தவர்கள் இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதுடன், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ,ஏனனில் அவர்கள் தங்கள் சந்தோசத்தை பெரிதுபட்தாமல் ,பார்க்கில் ஓர் இடத்தில ஓய்வு எடுக்காமல் சுற்றுலா சிறப்பாக அமைய அவர்கள் எடுத்துகொள்ளும் சிரமங்கள் புகைப்படத்தின் மூலம் தெரிகிறது,
இந்த வேலைகள் அனைத்தும் நம் மக்களுக்காக செய்யும் சேவையாகும், சகோதரர் யஹ்யா இந்த விசயத்தில் தானாக முன்வந்து வேலை செய்வார்கள் ,அவரோடு நான் ஹஜ்ஜு சென்றேன், அப்பொழுது அவர் தானாக முன்வந்து ஹாஜிகளுக்கு உதவிகளை செய்வதை பார்த்துள்ளேன்.
எப்ப சாப்பாடு போடுவாங்க சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்கம் போட்டுவிட்டு இடத்தை காலி பண்ணலாம் என்று நினைக்கும் இந்த காலத்தில் இப்படி நிகழ்சிகளை ஏற்பாடு செய்து அதற்காக சிரமம் ஏற்கிற அமீரக நண்பர்களுக்கு எத்தணை நன்றி சொன்னாலும் மிகையாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross