Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[29 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23268
உள்ஹிய்யா கொடுபதற்கு என்று ஒரு தனி அமைச்சகம் ஏற்படுத்தி செயல்பட்டாலும் அரசாங்கம் கூட இப்படி செயல்படுமா என்று யோசிக்கும் அளவுக்கு scientific காக எல்லாம் நடைமுறைப்படுதப்படுவதை நேரில் சென்று கேட்டு, அனுபவபூர்வமாக பார்த்து வந்தேன். மாஷா அல்லாஹ்.
வருகின்றவர்களுக்கு தேநீர் வடை தந்து உபசரிப்பதற்கு ஒரு குழு, மாடு அறுப்பது, வீட்டுக்கு கறி அனுப்புவது நமது குறிப்பிட்ட மாடு அறுக்கப்பட்டுவிட்டதா என்று அறிய அவ்வப்போது நோட்டீஸ் போர்டில் நமது பெயர், ரசீது நம்பர், மாட்டு நம்பர், அது அறுக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட நம்பர் உள்ள மாட்டை உரிப்பதற்கு ஒரு தனி குழு, எடை போட, டெலிவரி செய்ய இப்படி பல துறைகள், பல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக நடைபெறுகிறது
ஒரே ஒரு மனக்குறை..... ஆடு கொடுப்பதற்கு எல்லா வசதியும் அல்லாஹ் தந்திருந்தும் பணம் படைத்தவர்களும் மாட்டில் பங்கு சேர்ந்து கொள்கிறார்களே, இது ஏழைகளுக்காக நபிகள் நாயகம் கொடுத்த சலுகைதானே, இதை எப்படி பண வசதி உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரியவில்லை.
நீங்கள் பலி கொடுக்கும் பிராணியின் கறியோ இரத்தமோ நம்மை வந்து அடைவதில்லை. உங்களின் தியாக உணர்வுகள். அல்லாஹ்வுக்காக நீங்கள் எப்படி செலவு செய்கிறீர்கள் என்பதை பார்க்கத்தானே அல்லாஹ் இந்த உல்ஹியாவை ஏற்படுத்தினான். எனவே வசதி படைத்தவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்தவருடம் கிடாய்கள் அதிகமாக கொடுக்க முடிவு செய்யுங்கள். அல்லாஹ் தர நினைத்தால் அதை பன்மடங்காக்கி தருவான். "வல்லாஹு யுலாஇபு மண் யஷாஉ.. , வல்லாஹு வாசிஉன் அலீம் என்றெல்லாம் அல்லாஹ்வின் சிபதுக்களை உலமாக்கள் நமக்கு சொல்லிக்காட்டுகிரார்கள்.
அல்லாஹ் நம் எல்லோரது உல்ஹிய்யாக்களையும் ஏற்றுக்கொள்வானாக. அவனுக்காக சிரமம் எடுத்து இந்த பணியில் ஈடுபட்ட எல்லோருக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் கொடுத்து அல்லாஹ்வின் பாதையில் கணக்குப் பார்க்காமல் தாளாரமாக செலவு செய்யக்கூடிய உயர்ந்த உள்ளங்களையும் தந்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross