நமது நகரில் விளையாட்டு போட்டிகள் நடத்தஇங்குள்ள அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் விருந்துண்ணும் உணவு விடுதியாகவும், பயண களைப்பின் போது தங்கி செல்லும் பங்களவாகவும், posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM )[30 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23301
நகர் மக்களின் நலனுக்காக தங்களின் சொந்த வேலைகளை எல்லாம் பின் வைத்து விட்டு இந்த நல்ல காரியத்தில் ஈடுப்பட்டு இணைந்து சென்ற நல் உள்ளங்களுக்கு எனது பாராட்டுக்கள்... நகர்மக்களின் நல் துவாக்கள் உங்களுக்கு உண்டு...
சாளை சலீம் அவர்கள் குறிப்பிட்டது போல் மாவட்ட ஆட்சியரிடம் வெளிநாடு வாழ் காயலர்கள் அங்கு இந்திய தூதரகத்தில் கொடுத்த மனுக்களையும் இணைத்து கொடுத்து இருக்கலாம்...! காட்டியிருக்கலாமே என்கிற ஆவல் - சாளை சலீம் அவர்களின் ஆலோசனை வரவேற்க்ககூடியது...
காயலர்கள் அங்கு இந்திய தூதரகத்தில் கொடுத்த மனுக்களின் நகல் KEPA க்கு பார்வைக்கு அனுப்பி வைக்காமல் இருந்து இருக்கலாம்... இனி இது சம்பந்தமான மனுக்கள் எங்கு கொடுக்கப்பட்டாலும் அதன் நகலை அவரவர்கள் பரிமாறி கொள்வது மிக நன்று...
நமது நகரில் விளையாட்டு போட்டிகள் நடத்தஇங்குள்ள அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் விருந்துண்ணும் உணவு விடுதியாகவும், பயண களைப்பின் போது தங்கி செல்லும் பங்களவாகவும், இந்த D C W தொழிற்சாலையை பயன்படுத்தும் போது..! இங்குள்ள நகர மக்கள் புற்று நோயால் செத்தால் என்ன..! அவதி பட்டாள் என்ன...! இவர்கள் மூலம் நமக்கு எங்கே நியாயம் கிடைக்க போகிறது....?
மக்கள் கொதிக்க வேண்டும்... அணைத்து சமுதாய மக்களின் விழிப்புணர்வு மூலம் சாலையில் இறங்கி D C W தொழிற்சாலையின் முன் நின்று போராட்டம் - ஆர்ப்பாட்டம் என்று நடத்த வேண்டும்... மேலும் சர்வ தேச கடல் சார்ந்த பிரச்சனையாக இதை கொண்டு போக வேண்டும்... இது நடக்காத வரை ஒரு சிறு மாற்றமும் D C W வில் நடக்க போவதல்ல... இதுவே எனது கருத்து...
கூடங்குளம் ஊரே நமக்கு ஒரு உதாரணம்...
போராட்டம்...போராட்டம்...போராட்டம்... இதுவே தீர்வு...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross