Re:...MEDITATION AND MEDICATION posted bymackie noohuthambi (kayalpatnam)[31 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23339
டாக்...டாக் ..டாக்...இது அவர் அணிந்துள்ள BOOTS அவர் நடந்து வரும் ஓசை. மேலே ஒரு OVER COAT ...கழுத்திலே ஒரு STATHOSCOPE ....கையிலே ஒரு வெளி நாட்டு CIGARETTE ...அவர்தான் டாக்டர்....அவர் வரும்போது PINDROP SILENCE ..அவர் வெளியே செல்லும்போது நோயாளிக்கும் அவர்களை சூழ்ந்து இருக்கும் உறவினர்களுக்கும் நோய் குணமாகி விட்டது போன்ற ஆத்ம திருப்தி.... .அப்படித்தான் அந்த கால டாக்டர்கள்.
இப்போது நடந்த விழாவையும் அந்த நாளையும் ஒப்பிட்டு பார்க்கிறேன். ஏதோ கல்லூரி மாணவ மாணவிகள் போல் டாக்டர் இத்ரீஸ், டாக்டர் ஜாபர் சாதிக், ,பெண் டாக்டர்கள் சூழ இருக்க, ஒரு உயர்ந்த உருவம். உருவத்தால் மட்டுமல்ல,அன்பாக பண்பாக அமைதியாக நோயாளிகளுடன் பேசி அவர்கள் உள்ளங்களில் உயர்ந்து நிற்கும் பாவ நாச குமார் டாக்டர்... உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து என்று வள்ளுவம் சொல்லும் .....ஒரு உயரத்தில் குறைந்த உருவம்.... கண் காது தொண்டை மருத்துவத்தில் சிகரம் தொட்டு நிற்கும் செய்யத் அஹமது டாக்டர் .இருவரும் இத்தனை சிறிய இடைவெளியில் அவர்கள் எடுத்து வைத்த மருத்துவ கருத்துக்கள் காதுகளுக்கும் இதயத்துக்கும் இதமான மருந்து..
இவர்களை விஞ்சும் அளவுக்கு அபு தாபி கயல்நல மன்ற பொருளாளர் ஹுசைன் மக்கி ஆலிம் அவர்கள் எடுத்து வைத்த இறை வேண்டுதல் என்ற MEDITATION ..மருத்துவம் செய்யவேண்டும் என்ற MEDICATION ... இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அவர் வெளியிட்ட மருத்துவ கையேடு. படித்து பார்த்தபோது பரவசம். இந்த கை ஏட்டை வலது புறம் இருந்து படிக்க ஆரம்பித்தால் அது ஒரு சுவையான ஆரம்பம் "இன்றே செய்து முடித்து விடவேண்டும் என்ற ஒரு TENSION பதட்டம் வேண்டாம் இருக்கவே இருக்கிறது நாளை" என்று அந்த கை ஏடு முடிகிறது ....இல்லை ஆரம்பிக்கிறது.
ஒரு தவழும் குழந்தை எழுந்து நின்று பேச ஆரம்பித்திருக்கிறது. இம்மைக்கும் மறுமைக்கும் பிரயோஜனமில்லாத விவாதங்கள் வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் அபு தாபி காயல் நலமன்றம் சாதித்திருக்கிறது...அல்ஹம்து லில்லாஹ் தொடரட்டும் உங்கள் பணி.
HE ALONE LIVES WHO LIVES FOR OTHERS, OTHERS ARE MORE DEAD THAN ALIVE. வெள்ளி விழா நோக்கி வீறு நடை போடும் KMT மருத்துவமனைக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் அங்கே பணிபுரியும் மருத்துவ கண்மணிகளுக்கும் இந்த நிகழ்ச்சியை சரியான ஒரு இடத்தி அரங்கேற்றிய நுட்ப மிக்க அறிவாற்றல் படைத்த அபூ தாபி காயல்நல மன்ற உறுப்பினர்களுக்கும் எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்...து ஆ க்கள். .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross