யார் இந்த கொடூர பூனைக்கு மணி காட்டுவது... ? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[31 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23344
தொழிற்சாலையின் முன் ஒரு மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடக்காத வரைக்கும் இதற்க்கு சிறு அளவிலும் மாற்றம் வரவே வராது... நான் இதை உறுதியாக சொல்கிறேன்...!
உள்ளூர் - புறநகர் அணைத்து பொதுநல சங்கங்கள் மற்றும் மீனவர்களை இணைத்து மக்களுக்கு (இதன் நச்சு தன்மையின் ஆபத்தை) விழிப்புணர்வு செய்து KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION (KEPA) சார்பாக ஒரு ஆர்பாட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.. செய்யுங்கள்... மக்களின் ஆதரவு எந்த சதவீதத்தில் விழிப்புணர்வு உள்ளது என்று பார்க்கலாமே...?
காலம் கடந்து... காலம் கடந்து இதை திரும்ப திரும்ப செய்தியாக போடுவதும் அதை மக்கள் படித்து அவரவர் கருத்து பதிவதும் இந்த இணையதளத்தில் வாடிக்கையாகி விட்டது... என்றைக்கு...? இந்த தொழிற்சாலையின் முன் ஆர்ப்பாட்டம் - போராட்டம் என்று செய்திகள் வருமோ...! அன்றைக்கே சிறு மாற்றம் வரலாம்..!
நமது ஊரிலும் சில கருப்பு ஆடுகள் இந்த தொழிற்சாலையின் சுகபோகங்களை அனுபவித்து வருகிறது...! ஆர்பாட்டத்திற்கு இவர்களை அழைக்கும் போது இந்த கருப்பு ஆடுகளை நாம் அடையாளம் காணலாம்...
யார் இந்த கொடூர பூனைக்கு மணி காட்டுவது... ? இதுவே பலரின் சிந்தனையாக உள்ளதாக நினைக்கிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross