தங்களின் இந்த நம் ஊர் கடற்கரையின் போட்டோவை பார்த்ததுமே நம் மனம் ..கொதிப்படைகிறது...& ..துடிக்கிறது .....இப்படியே நாம் சும்மாவது பார்த்து கொண்டு ஒன்றுமே நடவடிக்கை எடுக்காமல் / இணைய தளத்தில் ...பதிவு செய்வதும் / சும்மா பேசி கொண்டும் இருந்தால் ஒன்றும் நடக்கவே நடக்காது......நம் ஊர் மக்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து பண வசூலில் மும்முரமாகவே இறங்கி ..வெளி நாட்டில் & உள் நாட்டில் ..இருப்பவர்கள் எல்லாம் அந்த ஊர் மன்றங்கள் மூலம் இந்த கடற்கரை பிரச்சனைக்கவே ஒரு இஸ்பிசல் சந்தா கொடுத்தும் & நம் ஊரில் இருப்பவர்கள் தங்களின் ஜமாத்து மூலம் சந்தா கொடுத்தும்.....நம் ஊர் அமைப்பான >>> KEPA <<< நிர்வாகத்தின் தலைவர்கள் மூலமாக ...முழு மூச்சாகவே இறங்கவேணும் ....நாம் எல்லாம் இந்த >>> KEPA <<< அமைப்புக்கு பக்கபலமாக இருந்து ...புல் சப்போட்டு பண்ண வேண்டியது......
நாம் யாவர்களும் ஒன்றுமே நடவடிக்கை எடுக்காமல் ...தொட்டுக்கோ ...தொடைத்துக்கோ ....என்று இருந்தால் ...நம் ஊரின் நிலைமை நாளுக்கு நாள் மோசம் தான் அடையும் ....இதில் நமக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை .
நம் ஊர் மக்கள் நம் ஊர் கடற்கரையில் பிடிக்க படும் ...கடல் வாழ் உயிர் இனங்களை ..கொஞ்ச காலத்துக்கு சாப்பிடாமல் இருப்பது நல்லது தான் ......
நம் ஊர் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்த வேணும்.... நம் ஊர் தற்போதைய கடற்கரையின் அவலத்தை ...உள் ஊர் கேபிள் T.V. மூலமாகவும் தெரியபடுத்த வேணும் ....அப்பத்தான் எல்லா பொது மக்களுக்கும் தெரியும் ....இந்த நாசமா போன >>.D.C.W. <<<<<வுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்.
இந்த நச்சு தன்மை கொண்ட நீரை பாருங்களேன் நுரைதள்ளுகிறது & D.C.W. மூலம் வெளிபடுகின்ற நச்சு காற்றாலும் நம் ஊரின் முழு தன்மையும் சுத்தமாகவே கேட்டு போகிறது /
நம் மக்கள் தான் உடல் நலம் பாதிக்கபடுகிறார்கள்...
நம் ஊர் ஜமாத்துக்களும் / பொது நல தொண்டு நிர்வனங்களும் / நம் ஊரில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் / நம் ஊர் பெரும் தலைகளும் / நம் நகர் மன்ற நிர்வாகிகளும்
கூட்டாகவே போராட களம் முழுமையாக இறங்கினால்தான் ......
>> D.C.W. << என்கிற தொழிற்சாலையை அடியோடு இழுத்து மூட நம்மால் கண்டிப்பாக முடியும் .
நம் ஊரில் எவ்வளவோ பேர்கள் படித்து நல்ல ...நல்ல ...பொசிசனில் உலகம் பூராவும் இருக்கிறார்கள் + நாம் உலகம் பூராவும் ...காயல் நற்பணி மன்றங்கள் வேறு வைத்து ...நம் ஊருக்கு தேவையான பல நல்ல ...நல்ல ...காரியங்கள்....மாஷா அல்லாஹ் செய்து வருகிறோம் .....இது போன்ற ஒரு அமைப்பு & ஒற்றுமையும் / செயல் பாடும் வேறு எந்த ஊரிலும் இருப்பதாகவே நமக்கு தெரிய வில்லை ....இதுவே நம் ஊருக்கு கிடைத்த ஒரு மாபெரும் கிப்ட்டு .....இவ்வளவும் நம்மிடம் இருந்துமா ????? நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிக்கிறோம் ...........??நமக்கே மன வருத்தமாகவே உள்ளது .....
வஸ்ஸலாம்.
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross