Re:...gas posted bymackie noohuthambi (kayalpatnam)[02 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23376
இது மட்டுமில்லை. வேலவன் காஸ் agency க்கு தொடர்பு கொண்டு காஸ் புத்தகம் வந்து விட்டதா என்று கேட்டு தெரிந்து கொண்டு அது வந்திருப்பதை அறிந்து கொண்டுதான் நேரில் சென்று இந்த பாரத்தை கொடுக்கவேண்டுமாம். ஒரு கடிதமும் எழுதவேண்டுமாம். எனக்கு காஸ் புத்தகம் இல்லை எனவே ஒரு காஸ் புத்தகம் உடனடியாக தரும்படி வேண்டிக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு கையெழுத்திட்டு இந்த பாரத்துடன் கொடுக்க வேண்டுமாம்.நான் நேரில் சென்று நொந்து போய் வந்துதான் இதை இங்கு பதிவு செய்கிறேன்.
20 30 வருஷத்துக்கு முன் என்ன பாடு பட்டோமோ அதே பாடும் கஷ்டமும் இன்னும் நீடிக்கிறது இந்த வேலவன் காஸ் agency லிருந்து நமதூர் காஸ் கம்பனிக்கு மாறுவதற்கு ஏதாவது வழி இருந்தால் அதையும் சொன்னால் நல்லது. இப்படி பொது மக்களுக்கு உதவியான விஷயங்களை செய்தால் அதுவே அல்லாஹ்வுக்கு சந்தோஷம் தரும். சொல்பவருக்கு மிக நன்மை தேடி தரும். செய்பவரும் உங்களுக்கு து ஆ செய்வார்.
ரேஷன் அட்டை பெயர் மாற்றம். பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல்.வாக்காளர் அட்டை பெயர் மாற்றம் போன்ற விஷயங்களிலும் நிறைய குளறு படி உள்ளது. அவைகளை கவனிக்கவும் நீங்கள் முற்பட்டால் மக்கள் உங்களை அணுகுவார்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்து பாருங்கள். அதிலே ஒரு மன திருப்தி சந்தோஷம் வரும். உங்கள் பிரச்சினைகளை அல்லாஹ் தீர்ப்பான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross