Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[02 November 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23407
அஸ்ஸலாமு அழைக்கும் மாமா .
நீங்கள் சொன்ன குப்பை தொட்டி மேட்டர் ..... இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லாத ஒன்று . முன்பு நமதூரில் , தெருக்களில் அனேக இடங்களில் குப்பை தொட்டிகள் இருந்ததுதான் . அப்போதெல்லாம் தெருவில் அதிக அளவில் வீடுகள் இல்லை . அதனால் ஆட்சேபனைகள் அதிகம் இல்லை . ஆனால் இப்போதோ வீடுகளின் பெருக்கம் அதிகம் . குப்பை தொட்டிகள் வைக்க இடமும் இல்லை . அப்படியே வைத்தாலும் அருகில் இருக்கும் வீட்டுக்காரர் ஆட்சேபனை செய்வார் . உங்கள் வீட்டுமுன் குப்பை தொட்டியை வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ?
ஆக , இதற்கு நகராட்சியால் கொண்டுவரப்பட்ட மிகச்சிறந்த வழி , குப்பை அல்லும் லாரி . ஆனால் இதற்கு மக்களுடைய ஒத்துழைப்புதான் இல்லை . குப்பையை வாளியுடன் கையில் எடுத்து செல்வதால் அவர்களுடைய அந்தஸ்து குறைந்துவிடும் என்று நினைக்கிறார்கள் . மற்றபடி லாரி வரவில்லை என்று சொல்வது பொய் . குப்பையை அடுத்தவர் வீட்டுமுன் வீசி எறிந்துவிட்டு செல்பவர்கள் , தங்கள் வீடு தெருவில் இருந்து அடுத்தவர்கள் இதுபோன்று செய்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .
மேலும் நீங்கள் சொன்னதுபோல் , லாரியில் வரும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லைதான் . நகராட்சி அவர்களுக்கு , Mask , Eyemask , Hand gloves , Boots போன்ற உபகரணங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் . அவர்களை அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross