இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu)[03 November 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23428
இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
அருமை நண்பன் அஜிசே,நான் அரபுநாடு வந்தாலும் உன் நலம் அறிய அடிக்கடி விசாரித்த வண்ணமாகவே இருந்தேன்!
நேற்றிரவு என் காக்கா அவர்கள் உன் மௌத் செய்தியை சொன்னவுடன் சிறிது நேரம் நிலை குழைந்து பின் நிதானத்திற்கு வந்து என்னை நானே தேற்றிக்கொண்டு சபூர் செய்து கொண்டேன்!அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே எற்று கொள்வதுதனே நம் புனித மார்க்கத்தின் கடமை!
அன்பு நண்பா,நம்முடைய பள்ளி பருவத்து காலத்திலிருந்து பழகி வந்த நினைவுக் காட்சிகள் மனக்கண் முன்னே மள, மளவென்று வந்து ஓடுகிறது.இதயம் கனக்கிறது,இரு கண்களிலும் கரைபுரளும் கண்ணீரை போத்த முடியவில்லை.பிறர் அறியாமல் என்னுள் நானே அழுது முடித்தேன் தனிமையில்!.
அஜிசை இரத்தமாற்று சிகிச்சைக்காக ஆறுமுகநேரிக்கு அழைத்து சென்று வந்த சகோதரர் சாமு ஹாஜி அவர்களிடம் விசாரிக்கும் பொழுது, அட போங்க ஹாஜியார் நாம் கவலைப்படும் அளவில் அணுவளவு கூட அஜிஷ்க்கு கவலை இல்லை,அந்த அளவிற்கு மனதைரியமும், தன்னம்பிக்கையுடனும் உற்சாகமாக இருக்கிறார்.
இவருடைய மன தைரியத்திற்கு அல்லாஹ்வின் உதவியால் நீண்ட ஆயுளுடன் இருப்பார் என்ற நிரப்பமான எண்ணத்துடன் சொன்னது எங்கள் எல்லோருக்கும் நல்லதொரு நம்பிக்கையை கொடுத்து கொண்டிருந்த வேளையில்,அல்லாஹ் அவன் வசம் அன்பு நண்பனை அழைத்துக்கொண்டான்!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளையும் பொருத்து ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற நற்பதவியைக் கொடுத்தருள்வானாக ஆமீன்!
அன்னாரின் பிரிவு துயரில் துவளும் குடும்பத்தார்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபமும், ஆறுதலும் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross