செய்தி: சுலைமான் நகர் - சல்லித்திரடு பகுதியில் தேங்கும் மழை நீர்! மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி நிரந்தரத் தீர்வு காண நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[04 November 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23478
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த அவசரக் கூட்ட தீர்மானம் படி சுலைமான் நகர் / சல்லித்திரடு பகுதி பொது மக்களுக்கு நல்ல காரியங்கள் மிகவே துரிதமாக நடக்கும் என்றால் பாரட்டுக்குரியது தான்...
சுலைமான் நகர் பகுதியில் ஏற்பட்டு இருந்த மழை நீர் தேக்க நடவடிக்கையை நம் நகர் மன்றம் ...அந்த பகுதி பொது மக்களின் கஷ்டத்தை உணர்ந்து ....வேகமாக தான் நம் ஆணையர் அவர்களும் / நம் நகர் மன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரும் நேரில் சென்று செயல் பட்டார்கள் என்பது பாராட்டுக்குரியது தான் ....இருப்பினும் இன்னும் வேகமாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இருக்கலாம்...
ரொம்பவே நான் இந்த கூட்ட அரங்கை உற்று கவனித்தேன் ...நகர் மன்ற தலைவி / உறுப்பினர்கள் தவிர வேறு யாருமே அரங்கின் உள் பகுதில் இல்லை...இதுவே இவர்கள் நிதானமாக எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தீர்க்கமான நல்ல முடிவுகள் எடுக்க வசதியாக இருக்கும் அல்லவா .....
பார்வையாளர்களும் சரி / நிருபர்களும் சரி கொஞ்சம் ஒதுங்கியே தள்ளி இருந்து செயல்படுவதுதான் சரியானது.
போன போட்டோ & வீடியோ கிளிப் ....இவைகளை நாம் பார்த்தால் நமக்கே மனதுக்கு சங்கடமாகவே இருக்கும்..... அவ்வளவு நெருக்கமாகவே ....யார் நகர் மன்ற உறுப்பினர்கள் / யார் பார்வையாளர்கள் ....என்றே நாம் தெரியாமல் தவிப்போம்.....
ஆதலால் இந்த அவசரக் கூட்டம் போன்றே ...வருகின்ற எல்லா கூட்டங்களும் ....பார்வையாளர்களுக்கும் .... நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் இடை வெளி விட்டு நடத்துவது தான் சிறப்பானது .... நம் நகர் மன்ற தலைவி / உறுப்பினார்கள் ...எந்த ஒரு டென்சனும் இல்லாமல் ...அவர்களாகவே பேசி நிதானமாகவே ஒரு முடிவும் எடுக்க தோதுவாக இருக்கும் அல்லவா ....
மழை காலத்தில் கொசு தொல்லைகள் அதிகமாக இருக்கும்.... ஆதலால் நம் நகர் மன்றம் கண்டிப்பாகவே கொசு மருந்து அடித்து / பவுடர் தூவினால் தான் நம் மக்களுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பு ....
நம் நகர் மன்ற துணை தலைவர் .அவர்கள் பெரு நாள் அன்று காலை அவர்கள் தொகுதியில் அவர்களின் நேரடி பார்வையில் மழை நீர் தேக்கத்தை சரி செய்வதை பார்த்து ...நாம் மகிழ்சி அடைந்து ....பெரு நாள் அன்றுமா ??? நம் துணை தலைவர் அவர்கள் செயல் பட்டார்கள் என்பதை நினைக்கும் போது நமக்கே ...வியப்புடன் ...மலைப்பாக இருந்தது .....
இது போன்று எங்கள் அம்பல மரைக்கார் தெரு ..உறுப்பினர் நம் மரியாதைக்குரிய சகோதரர்.ஹாஜி .மம்மீன் அவர்களும் எங்கோ வெளி ஊரில் இருந்தாலும் சரி .....ஊரில் இருந்தாலும் சரி தம் தொகுதி மக்கள் மீது முழு கவனம் செலுத்துகிறார்கள்...என்பது குறிப்பிடத்தக்கது & பாராட்டுக்குரியது தான் ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross