சலாம். வாகனங்கள் மூலம் ஏற்படும் விபத்துக்களை தவிப்பதற்கு "வேகத்தடை " அமைப்பது அவசியம்தான்.
அதே நேரத்தில் அதனை முறையோடு அமைப்பது அவசியம்.
வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் வாகனங்களை உதிரிப் பாகங்களை சேதப்படுத்தக்கூடாது .
ஏனோ தெரியவில்லை? நமதூரில் அமைக்கப்பட்ட பெரும்பான்மையான வேகத்தடைகள் நடுரோட்டில் அமைக்கப்பட்ட "ஒரு ஆலடி சுவர்" போல்தான் தெரிகிறது!
திருநெல்வேலி ,தூத்துக்குடி போன்ற நகரங்களில் அமைக்கப்பட்ட முறைப்படி நமதூரிலும் அமைக்கலாமே !
ஏன் ஒவ்வரு முறையும் அமைப்பதும், பிறகு குறைப்படும், நீக்குவதும் இப்படி வீண்விரயங்கள், சிரமம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
அரசாங்க பணமானாலும், நகராட்சி பணமானாலும் மொத்தத்தில் அனைத்தும் மக்களின் பணமே !
ஆகவே ! தலைநகரங்களில் அமைக்கப்பட்ட "முன்மாதிரிகளைப் போன்று " நமதூரிலும் அமைக்க வேண்டும் என வேண்டுகிறேன் !
நகராட்சி மன்றமும், உஊர் மக்களும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி இது போன்ற நற்காரியங்கள் புரிய வேண்டுமென வேண்டுகிறேன்! நன்றி!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross