சகோதரி டி.கலைச்செல்வி அவர்கள் கூறிய கேள்வியை இன்று தலைவி கேட்டுள்ளார்கள்... இவர்களின் பதில்கள் தான் என்ன... ? மக்களின் கேள்வியும் இதுவே... பதில் கூற முடியுமா உங்களால்...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[06 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23542
தற்போது எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர் சுகு பழைய நகர்மன்றத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார் என்றும், கடந்த 20 வருடங்களாக ஆவணம் இல்லாமல் ஓடிய வண்டி குறித்து தெரிந்திருந்தும் அவர் பழைய நகர்மன்றத்தில் தெரிவிக்காதது ஏன்...? என்றும் நகர்மன்றத் தலைவர் கேள்வியெழுப்பினார். இது செய்தியின் வாசகம்...
இதே கேள்வியை சமீபத்தில் பொது இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் மாவட்ட மாதர் சங்க தலைவி டி.கலைச்செல்வி அவர்கள் கேள்வி கேட்டார்..! அந்த கேள்விக்கு உறுப்பினரால் இது வரை பதில் கூற முடிந்ததா...?
மாவட்ட மாதர் சங்க தலைவி டி.கலைச்செல்வி அவர்களின் கேள்வி இதோ...
நகராட்சிக்குச் சொந்தமான ஆவணம் இல்லாத வாகனத்தைப் பழுது நீக்கி பயன்படுத்துவதற்கு நிறைவேற்றப்பட்ட நகர்மன்றத் தீர்மானத்திற்காக தலைவியை தொடர்ந்து குற்றஞ்சாட்டும் உறுப்பினர்கள், கடந்த 20 ஆண்டுகளாக இதே வாகனம் இயக்கப்பட்டபோது என்ன செய்தார்கள் என்று கேள்வியெழுப்பினார்.
கடந்த நகர்மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் சிலரும் இந்த நகர்மன்றத்திலும் உறுப்பினர்களாக இருந்துகொண்டு - அன்று சொல்லாத குற்றச்சாட்டை இன்று சொல்வது உள்நோக்கம் கொண்டது... மேலும் காயல்பட்டினம் நகராட்சியின் பெண் தலைவருக்கு எதிரான சதிச்செயல்களையும் இனங்காட்ட கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நகராட்சிக்கு நல்ல - நேர்மையான தலைமை கிடைத்தும், உறுப்பினர்கள் பலரின் ஒத்துழைப்பின்மையால் நிர்வாகம் சீர்கெட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சகோதரி டி.கலைச்செல்வி அவர்கள் கூறிய கேள்வியை இன்று தலைவி கேட்டுள்ளார்கள்... இவர்களின் பதில்கள் தான் என்ன... ? மக்களின் கேள்வியும் இதுவே... பதில் கூற முடியுமா உங்களால்...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross