Re:... posted byHusain Noorudeen (Abu Dhabi)[07 November 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23556
வாப்பா ஸாலிஹ்,
மண் நிரப்பப்பட்டிருக்குற எடத்துக்கு கிழக்குல இருக்குற வீட்ட பாத்தியா வாப்பா? இப்ப இருக்குற ரோடு மட்டத்துக்கு கீழ அந்த வீட்டு தரை மட்டம் போயிட்டதால, வீட்டு முன்பக்க வாசல் நெலைய உயர்த்தி ஒண்ணரை அடி உயரத்துக்கு படியும் கட்டி, தங்கள் வூட்டுக்குள்ள மழைத்தண்ணி வந்துராம இருக்கனுமேன்னு மழைக்காலங்கள்ள அல்லாஹ்கிட்ட துஆ கேட்டுகிட்டு இருக்காங்க. ஒரு காலத்துல இந்த வீட்டு நிலை மட்டத்திலிருந்து, ரோடு 4 அடி கீழ இருந்துது. புதுசா ரோட்ட போடுறேன்னு சொல்லி இந்த மன்றத்து உறுப்பினர்கள் அடிச்ச கொள்ளைல இப்ப இந்த நெலமை.
இந்த மாசம் நடந்த மன்ற கூட்டத்துல வேற, இந்த தெருவுக்கு புதுசா ரோடு போடுறதாக சொல்லி இருக்காங்க. இப்ப இந்த வீட்டுக்காரங்க என்ன பண்ணனும்னு மன்றத்துல இருந்து தெளிவா சொன்னாங்கன்னா நல்லதா போகும்.
ஒண்ணு, அவங்க ரோட்ட நல்லா தோண்டி புது ரோடு போடணும். இல்ல, நாங்க வழக்கம்போல இருக்குற ரோட்ட கொத்தி அதுல இருந்த ஜல்லியவே பேஸ் கோர்ஸா போட்டு (அத புது ஜல்லி கொண்டு போட்ட மாதிரி கணக்கு காட்டி, பாக்கட்ல பணத்த அமுக்கிகிட்டு) அதுக்கு மேலதான் புது ரோட்ட போடுவோம்னா, தயவுசெய்து முன்னக்கூட்டியே சொல்லிடுங்க. இந்த வீட்டுக்காரங்கள போல இதே நெலமையில உள்ள மத்தவங்களும் சேர்ந்து அவங்க அவங்க வீட்ட உடைச்சுப்போட்டு, புது வீடு கட்ட முடிவெடுத்து, அது மூலமாவும் இந்த மன்றத்துக்கு வருமானத்த கூட்ட அவங்க தயாராயிடுவாங்க.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross