மனதை மகிழ்வாய் வைத்துக்கொண்டவர்! posted byS.K.Salih (Kayalpatnam)[08 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23610
உடல் நலனில் நாம் அனைவரும் கவலையுறத்தக்க பல குறைகள்... ஆனால் அவையெதையுமே மனதிலோ - மண்டையிலோ ஏற்றாமல், இருக்கும் வரை இன்பமாக வாழ்ந்தவர் அப்துல் அஜீஸ் மாமா அவர்கள்...
என்னைக் காணும்போதெல்லாம் (நான் அவசர வேலையிலிருந்தாலும்) ஒரு பத்து நிமிடமாவது நின்று கதை பேச வைத்துக் கேட்பார்...
மூங்கில்கள் உரசும் குரலில் அவர் முகமலர்ச்சியுடன் அனைவரையும் குசலம் விசாரிக்கும் அழகே தனிதான்!
மனம் திறந்து சொல்கிறேன்... அவர்கள் ஜனாஸாவிற்கு வந்தபோதுதான், பல மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த செய்தியையே கேள்விப்பட்டேன்... சுகவீனமான காலத்திலும் கூட அவர்கள் புதுப்பள்ளிக்குத் தொழ வருவார்கள்... தைக்கா தெருவில் ஒரு சின்ன உலா வருவார்கள்... ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் கொஞ்சம் அமர்வார்கள்... இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இவர்களின் உடல்நலக் குறைவு பற்றி சிறிதும் அறிய இயலாத காரணத்தால் ஒருநாள் கூட உடல் நலம் விசாரிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
மகிழ்ச்சியே உருவான அந்த ஆத்மாவை அல்லாஹ் மண்ணறையில் சுகமாக வாழச் செய்வானாக... மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கி, அவர்களையும் - நம்மையும் நபிமார்கள் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீன்களுடன் ஒன்று சேர்த்து வைத்தருள்வானாக, ஆமீன்...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் யாவரின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்... அழகிய பொறுமையை அல்லாஹ் உங்களுக்கு அளித்தருள்வானாக, ஆமீன்.
ஆழ்ந்த இரங்கலுடன்,
S.K.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் S.K.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross