இதயமார்ந்த இரங்கல்கள் posted bySalai Sheikh Saleem (Dubai)[10 November 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23674
நேற்று வெள்ளி என்பதால் வெளியில் சென்று விட்டு இன்று காலையில்தான் நமது வெப் ஐ திறந்தால் ஷாபி காக்கா வாபாத்து செய்தி.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்....
நான் ஆதித்தனார் கல்லூரியின் திமுக மாணவரணி தலைவராய் இருக்கும் போது என்னை தனியாக கூப்பிட்டு (எதிரணி என்று கூட பார்க்காமல்) "இப்போதே அரசியலில் ஈடுபட்டு உன் படிப்பை கெடுத்துக்கொள்ளாதே, நாங்கள்தான் இதிலெல்லாம் வேறு வழியில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்" என்று ஒரு தகப்பன் ஸ்தானத்தில் எனக்கு அறிவுரை வழங்கிய கணவான் - எந்த சண்டை சச்சிரவுகளுக்கும் போகாத, கட்சி காசிற்கு ஆசைப்படாத ஒரு தூய்மையான அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மறுமையில் சுவனபதியில் நல்லடியார்களுடன் தரித்திருக்க அருள் பாலிப்பானாகவும் ஆமீன்.
எனதன்பு மச்சான்கள் சம்சுதீன், தமிழன் முத்து இஸ்மாயீல் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தார்களின் சார்பில் அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் "சபர்" என்ற அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும். ஆமீன். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross