ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[10 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23676
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
தெருக்கள் இருக்கும் நிலையை நன்றாக தெரிந்த பின்னும் வாய் மூடி மௌனியாக இருப்பதில் அர்த்தமில்லை.
தெருவில் மழை நீர் தேங்கி நிற்கிறது அதை வடியச் செய்து போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாது மக்களுக்கு வசதி செய்து தரும்படி கேட்டால் - போக்குவரத்து வாகனங்களை அதிலே சிக்கச் செய்து, மக்களுக்கு மேலும் துன்பத்தை , சிரமத்தை அதிகரிக்கிறார்கள் என்றால் இவர்களை என்னெவென்று சொல்வது.
-------------------------------------
நோட்டமிட வேண்டும் :
மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே - ஏமாற்றங்களிலிருந்து விடுதலை அடையலாம்.
உண்மையிலேயே இவர்கள் அந்த வேலைக்கு பொருத்தமானவர்கள்தானா? இல்லை வேண்டும் என்றே இந்த செயலை செய்கிறார்களா? என்பதை நோட்டமிடுபவர்கள் நோட்டமிடுகிறார்கள் - இருந்தாலும் மக்கள் நோட்டமிட வேண்டும்.
-------------------------------------------
நடவடிக்கை எடுக்க வேண்டும் :
" நீரை உறிஞ்சும் ஒரு வகை சரல் கொண்டு அவற்றை நிரப்புவதாகவே நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்ததாகவும், சிறு மழைக்குக் கூட தாங்காத அளவுக்கு மட்டமான மணல் போடப்பட்டுள்ளது தனக்கு வியப்பளிப்பதாகவும் நகராட்சி தலைவர் சொல்கிறார் என்ற செய்தி உண்மையாக இருக்குமானால் அவர்கள் மீது நகராட்சி தலைவர் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவரும் மற்றும் அத்தனை உறுப்பினர்களும் இதற்கான செலவுகளை துல்லியமாக ஆராய்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும்.
--------------------------------------
மக்கள் உஷாராக இருந்தால் :
புதிதாக ரோடு போடும்போது அந்தந்த பகுதி ஆண் மக்களோடு, ஜமாஅத்'கள், சங்கங்கள், இயக்கங்கள் என்று எல்லோருமே தெருவுக்கு வந்து, அவர்கள் முறையாக ரோடு போடுகிறார்களா என்பதை கவனியுங்கள். நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் ஏமாற்றுபவர்களால் ஏமாற்ற இயலாது.
ரோடு ஒழுங்காக போட்டால், நீங்கள் ரோட்டிலிருந்து வீட்டிற்கு படிவழியாக ஏறி போகலாம் - விழிப்புணர்வு இல்லாதிருந்தால் ரோட்டிலிருந்து வீட்டிற்கு படிக்கட்டு வழியாக ஏறுவதற்கு பதிலாக இறங்குமுகமாக படிக்கட்டுகளை அமைத்து இறங்கிதான் போகவேண்டும்.
மழை நீர் அத்தனையும் உங்கள் வீட்டிற்குள்தான் அடைக்கலம் புகும். இன்னும் பல தொல்லைகளும் ஏற்படும்.
ஆகையால் இனிமேல் ரோடுபோடும்போது ஆண்கள் அனைவரும் வெளியே வந்து ரோடு போடுவதில் ஏற்படும் தவறுகளை தட்டிக்கேட்டு, அவர்களை ஒழுங்கான முறையில் ரோடு போட செய்ய வேண்டும் – அப்படி செய்ய மக்களால் முடியும். ஒன்றிரண்டு இடங்களில் மக்கள் இறங்கி போராடினால் எல்லாம் சரியாக நடக்கும்.
இதனால் காண்ராக்ட் காரர்களுக்கு நஷ்டம் வரத்தான் செய்யும் அப்படி நஷ்டம் வந்தால்தான் அடுத்த முறை தரமான ரோடு போடுவார்கள் இலஞ்சங்கள் கொடுப்பது ஒழிக்கப்படும்.
மக்கள் உஷாராக இருந்தால் ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross