அமைதியே உருவானவர்... posted byS.K.Salih (Kayalpatnam)[10 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23680
மரியாதைக்குரிய ஷாஃபி மாமா அவர்கள் அமைதியே உருவானவர்... உரக்கப் பேசி பழக்கமில்லாதவர்.
அரசியல் கட்சியில் அங்கம் வகித்தபோதிலும், தன் பெயரைக் கெடுத்துக்கொள்ளாத - விரல் விட்டு எண்ணப்படும் ஒரு சிலருள் ஒருவர்.
கட்சி மூலம் சமுதாயத்திற்கும், சமூகத்திற்கும் ஏதேனும் வாங்கிக்கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே செயல்பட்டவர்.
ஒன்று சொன்னால் வியப்புறுவீர்கள்! அதிமுக கட்சி பிரசுரங்களில் எம்.எஸ்.எம்.ஷாஃபி என்று பெயர் இருக்கும். ஆனால் அது இவர்கள்தான் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. அவர்களின் மகனார் ஷம்ஸ் காக்கா அவர்கள் நகர்மன்ற உறுப்பினரானபோதுதான் அதை நான் அறிந்துகொண்டேன்.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் வைபவக் கமிட்டியில் அங்கம் வகித்து பணியாற்றிய ஷாஃபி மாமாதான் எனக்கு துவக்கம் முதல் தெரிந்த நபர்.
அல்லாஹ் அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மகனார் ஷம்ஸ் காக்கா அவர்கள், மருமகனார்களான (என் அன்பு உஸ்தாத்) முல்லாக்கா தமீமுல் அன்ஸாரீ காக்கா, ‘நட்புடன் தமிழன்’ முத்து இஸ்மாஈல் காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்
அனைவருக்கும் எனது அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross