Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[10 November 2012] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23685
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய எனது ஆசிரியர் காஜா முஹைதீன் அவர்கள் பணி நிறைவு .... நீங்கள் எங்கள் பள்ளிக்கு செய்த சேவைக்காக உங்களுக்காக துஆ செய்கிறேன் . அல்லாஹ் உங்களுக்கு மனதில் நிம்மதி , அதிக பறக்கத்துகள் , சரீர சுகத்தையும் , நீடித்த ஆயுளையும் தந்தருள்வானாக . ஆமீன் .
இவரிடம் பயின்ற மாணவர்கள் தமிழ் இலக்கணத்தில் புலமை பெற்றனர் என்றே சொல்லலாம் . அந்த அளவுக்கு மிக எளிமையாக , புரியும் படியாக இலக்கணம் கற்றுத்தந்தவர் . ஒருமுறை நெல்லையில் 11 th படிக்கும்போது ஒரு தமிழ் வகுப்பில் எனது ஆசிரியர் இலக்கணத்தில் சில கடினமான கேள்விகளை கேட்டார் . அதற்கான பதில்களை உடனடியாக சொன்னேன் . அந்த ஆசிரியர் என்னிடம் , இதற்குமுன் நீ எங்கே படித்தாய் , உனது தமிழ் ஆசிரியர் யார் என்று கேட்டார் . இந்த பள்ளியில் , இந்த ஆசிரியரிடம் தமிழ் பயின்றேன் என்று சொன்னவுடன் , அந்த வகுப்பிலேயே காஜா முஹைதீன் சார் அவர்களை பாராட்டினார் .
பொதுவாக வரலாறு புவியியல் பாடத்தில் யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டமாட்டார்கள் . அதை மாற்றி , சுற்றுவட்டார பள்ளிகள் வியக்கும் அளவுக்கு அந்த பாடத்தை சொல்லித்தந்து , ஒருமுறை இந்த பாடத்தில் மாநில ரேங்க் எடுக்க வைத்தவர் . ( V .S .M . Abu )
வகுப்பறைக்குள் மிகுந்த கண்டிப்புடன் இருப்பவர் , மற்றபடி வெளியில் வந்தால் மாணவர்களிடம்கூட நண்பர்கள் போலத்தான் பழகுவார் . கொடுக்க்காயபுளி மரமேறிய சம்பவங்களும் உண்டு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross