எனது பெரு மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு என் இதயங்கனிந்த ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.
பொதுவாக வரலாறு, தமிழ் இலக்கணப பகுதி போன்ற பாட வேளைகள் என்றாலே மாணவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்பு. ஆனால் விதி விலக்காக எங்கள் ஆசிரியர் அவர்கள் வரலாறாக இருந்தாலும், தமிழ் இலக்கணப் பகுதியாக இருந்தாலும் எளிமையாகவும், தனது நகைச் சுவை கலந்த கண்டிப்புடன் புரியக் கூடிய வகையில் (அதிருப்தியாக மாணவர்கள் கருதக் கூடிய அந்த இரண்டுப பாட வேளைகளையும்) பயிற்றுவிக்கும் முறை மிகவும் அலாதியானதாகும்.
மேலும் எங்கள் ஆசிரியர் அவர்களின் தேர்வுக் கால பயிற்சியானது அதை விட சிறப்பானாதாகும். காரணம் கணம் ஆசிரியர் அவர்கள் தேர்வுக்கு முந்திய நாள் தரக் கூடிய வினாக்கள் (one word ,short question, long question ) அச்சு பிறழாமல் வெளியிலிருந்து வரக் கூடிய, மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு போன்ற வினாத்தாளில் இடம் பெறுவதைக் கண்டு பலமுறை பிரமித்திருக்கின்றோம்.
மேற்க கூறிய பிரலாபிக்கக் கூடிய தனிச் சிறப்புகள் வாய்ந்த ஆசிரியருக்கு கனத்த இதயத்துடன் அடியேனும் பிரியா விடையளிக்கின்றேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தனிப் பெருங் கருணையாலும், வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம அவர்களின் நல்லாசியாலும் உத்தமத் தோழர்கள்,உன்னத இமாம்கள், உயரிய இறை நேசச் செல்வர்களின் துஅ பரக்கத்தாலும் பல்லாண்டு குடும்ப சகிதம் மகிழ்வுடன் வாழ்ந்து கல்விச் சேவை உட்பட பல சேவைகள் புரிந்திட அக மகிழ்வுடன் வாழ்த்தும் நேங்க்சம்
தங்கள் கீழ் படிந்த மாணவன்
முஹிய்யதீன் அப்துல் காதர் p A K (பாலப்பா),
முன்னாள் மாணவர்,
சென்ட்ரல் மேனிலைப் பள்ளி,
இருப்பு(CAMP)-மன்னடி,
சென்னை
தொடர்புக்கு-9751501712 044 -25266705
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross