Re:பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது... posted byceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.)[10 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23699
எங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ஆசிரியர் காஜா முஹைதீன் அவர்கள் பணி நிறைவு .... நீங்கள் எங்கள் பள்ளிக்கு செய்த சேவைக்காக உங்களுக்காக துஆ செய்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு மனதில் நிம்மதி , அதிக பறக்கத்துகள் , சரீர சுகத்தையும் , நீடித்த ஆயுளையும் தந்தருள்வானாக . ஆமீன் .
சகோதரர் Vilack SMA சொன்னது போல உங்களிடம் பயின்ற மாணவர்கள் தமிழ் இலக்கணத்தில் ( மெல்லினம் ,இடையினம் .வல்லினம் ) புலமை பெற்றனர் என்றே சொல்லலாம் . அந்த அளவுக்கு மிக எளிமையாக , புரியும் படியாக இலக்கணம் கற்றுத்தந்தவர் .
தமிழ் பாடத்தில் மிகுந்த புலமை பெற்றவர், .தமிழில் கம்ப ராமாயணம் , மகாபாரதம் , மணிமேகலை போன்ற தொல்காப்பியங்களை அதன் முழு கதைகளையும் மிக சிறப்பாக நடத்தினார் .அவை இன்றும் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது.
முன்னால் தலைமையாசிரியர் மர்ஹூம் இப்ராஹீம் சாருக்கு வலது கையாக இருந்தார், பீஸ் இல்லாத நைட் ஸ்டடி கிங்காக இருந்தார்.(அந்த காலகட்டத்தில் 10 ,12 ஆவது வகுப்புகளுக்கு நைட் ஸ்டடி வைப்பார்கள் ஒரு நாளும் தவறாமல் வந்து விடுவார்.) இப்படி பல சிறப்பம்சங்களை கொண்டவர்தான் எம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் காஜா முகைதீன் அவர்கள்... மாஸா அல்லாஹ் அன்று பார்த்தது போல் தான் இன்றும் இருக்கிறார்.கொஞ்சம் முடி தான் வெளுத்துள்ளது...!!!
சிலோன் பேன்சி காழி .
ஜித்தாஹ் , சவுதி அரேபியா...
சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் .
(1987 Batch )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross