வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்...புதுவிதமான மலர்களே நீங்கள் நதி தனி ஆடி கவி பல பாடி அசைந்து அசைந்து ஆடுங்கள்....! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[11 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23711
வசந்தகாலம் வாசனைப் பூக்களை வழியெங்கும் தூவி வரவேற்கின்றது. வசிப்போர்தம் நாசியில் நறுமணம் பூசிடும் இப் பூக்களின் மலர் (படுக்கையல்ல) படுகை கண்ணுக்கு குளிச்சியாகவும் மனதிற்கு இதமாகவும் உள்ளது. ஈரத்தில் துவைந்த மணல், நனைந்த பாதை(ரோடு), இதமான சூரிய வெளிச்சம், பட்சிகளின் பாட்டொலி, தலைப்பாகையும் குளிராடையும் அணிந்து சற்று கூன்விழ நடக்கும் பெரியவர்கள், வாடைக்காற்று செவிக்குள் சிலீரென சீண்டி விடாமல் இருக்க மழலைகளுக்கு மங்கி கேப், வழி நெடுகிலும் மழைநீர் தேங்கிக் கிடப்பதால் வயது வித்தியாசமின்றி நடைபழகும் மனிதர்கள்.
எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்து காதுகளில் விழும் சேவலின் கூவல், சாலையில் வரும் வாகனங்கள் ஒலி கேட்டு ஓடி ஒதுங்கும் காட்சி, சேறும் சதியும் இரண்டரக் கலந்து செருப்பு நம் பின் புறம் தெளிக்க ஆடை முழுதும் சந்தணக் கோலம். பனியில் நனைந்த வீடுகள், படிகளில் விறைத்து நிற்கும் ஆடுகள், பாலித்தீன் பைகளால் பால் கேன்களை மூடி வீடு வீடாய் பால் ஊற்றும் பால்க்காரன், வாப்பா வாங்கி வந்த சூடான ஆவி பறக்கும் பக்கடா, உம்மா போட்டுத்தரும் ஏலக்காய் மணம் நிறைந்த தேனீர் ஒரு உறி, ஒரு கடி, ஆஹா! அதில் தான் எத்தனை சுகம்...? பைக் சீட்டில் பதிந்திருக்கும் பனித்துளிகளை கையால் வளித்து உதறும் போது சில்லென சிலிர்க்கும் உடல், இப்படி அனுவவித்த மழைக்காலத்தின் காலை நிகழ்வுகளை ரெம்பவே மிஸ் பண்ணுறோம்...!
ரெம்ப தேங்ஸ் மிஸ்டர் சாலிஹ். இப்படி ஒரு படத்தை எமக்கு அர்ப்பணித்தமைக்கு! இன்னும் எழுதலாம் ஆயிரம் வரிகள்...ஒரு படத்தைப் பார்த்தவுடன் மனதில் கவிதை சுரக்கின்றது என்றால் அப் படம் பேசுகின்றது என்று பொருள். இனியும் இது போன்று நிறைய எதிர்பார்க்கின்றோம். இன்ஷா அல்லாஹ்...!
குசும்பு: நீங்க கழுதையைப் போட்டாலும், கருவாட்டைப் போட்டாலும் கமெண்ட் மட்டும் பிச்சு புடிங்கிட்டு வருதப்பா...எப்பா மண்ணின் மைந்தா உன் பங்குக்கு நீயும் வா...! அப்பதான் கமெண்ட் பகுதி களகட்டும்...!
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross