செய்தி: புதிய செயல்திட்டங்களுடன் ‘மெகா’ மீண்டும் துவக்கம்! துவக்கமாக நகர்நலன் குறித்த கோரிக்கைகள் நகர்மன்றத் தலைவரிடம் சமர்ப்பிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மெகா தொடர்ந்த வழக்கு! posted bymackie noohuthambi (kayalpatnam)[11 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23735
MEGA நகரமன்ற தேர்தலின்போது, நகரமன்ற தலைவராக ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அரசு ஆணையை எதிர்த்து வழக்கு தொடுத்தார்களே அது என்ன ஆனது. தீர்ப்பு வந்ததா இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளதா, தயவு செய்து அறிய தாருங்கள்.
இப்போது MEGA புதிய அர்த்தங்களுடன் ஆரம்பித்து இருப்பது பற்றி அறிந்து சந்தோஷம். நமது ஊர் மக்கள் குடும்ப ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, விலக்க, வாக்காளர் அட்டையில் பெயர் குளறுபடிகளை தவிர்க்க, படாத பாடு படுகிறார்கள். திருசெந்துருக்கும் ஊருக்கும் நாயாக அலையை வேண்டியதுள்ளது. இப்போது புதிதாக சமையல் எரி வாயு அட்டைக்கும் புதிய அலைச்சல் திரிச்சல் ஆரம்பமாகியுள்ளது. எனவே மக்களின் இந்த அன்றாட தேவைகளையும் செய்து கொடுக்க ஒரு அலுவலகம் அமைத்து செயல்பட்டால் மிக உதவியாக இருக்கும். அதற்கென ஓர் சர்வீஸ் சார்ஜ் அறவிட்டு, மக்கள் கஷ்டங்களையும் நீக்கி வைக்க உதவுங்கள்.
MEGA திட்டங்களை விட சாமானியர்களின் அன்றாட சிரமங்களை போக்குவதற்கு வியூகம் வகுத்து உதவுங்கள். மக்கள் உங்களை பெரிதும் பாராட்டுவார்கள். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross