வாழிய நீ எம்மான்! வளமுடன்,நலமுடன்! posted bykavimagan kader (qatar)[11 November 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 23742
பள்ளிக் காலத்தில் பலமுறை எனக்குள் எழுந்த ஐயப்பாடு,
கம்பராமாயணத்தை வடித்தது கம்பனா? அல்லது எங்கள்
அறிவுலக ஆசான் காஜா முஹைதீன் அவர்களா என்று. கதையின்
நாயகனை விட எனது மனதில் கம்பீரமாக பதிந்துவிட்ட சார்
அவர்கள் எங்களது வகுப்பு ஆசிரியராகவும் பணியாற்றிய காலம்,
இப்போதும் தென்றலாய் இதயத்தில் வீசுகிறது.
அக்பரும், அலெக்சாண்டரும், இந்திய சுதந்திரப் போராட்ட களமும், வரலாற்றுப் பாடமாக அல்லாமல், எமது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களாய், அடிமனதில் ஆழமாகப் பதிந்து போனதிற்குக் காரணம் மதிப்பிற்குரிய சார் அவர்கள்தான்!
கவிதை என்ற பெயரில் எதை எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த
குட்டிக் காலத்தில், முறையாக கவி படைக்க களம் அமைத்து தந்த அன்பு ஆசான் அவர்களது வரலாறு, தரணியில் தமிழ் உள்ளவரை நிலைக்கட்டும்.
சார் அவர்கள் பூரண நலமோடு, நீண்ட நெடுங்காலம்
மகிழ்வுடன் வாழ துஆ செய்யும் மாணவர்களுள் ஒருவனாக,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross