செய்தி: நகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திட பசுமையைப் பெருக்க KEPA செயல்திட்டம்! லட்சக்கணக்கான மரங்களை நட்ட பசுமை ஆர்வலரைக் கொண்டு கருத்தரங்கம்! அமைப்பினர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தெருவுக்கு இரண்டு நபர் இருந்தால் போதும் நகர் மன்ற தலைவியின் பசுமை காயல் திட்டத்தின் மூலம் நமதூர் பசுமையவது உறுதி.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[14 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23847
நகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திட பசுமை ஆர்வலர்களுடன் கைகோர்த்து நகரை தூய்மை படுத்த மன தூய்மையோடு முயற்சிக்கும் KEPA வின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்..
கவிமகனின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது...
வெறும் மரங்கள் அல்ல! ஆக்சிஜன் சுமக்கும் அற்புதப் பெட்டிகள்!
சாலையோரங்களில் அதிகளவில் மரங்கள் நட்டப்பட்டு இன்று காயல்பட்டினம் கிழக்குப்பகுதி சோலைவனமாக மாறி வருகிறது இதற்க்கு முழு காரணம் மரைக்கார்பள்ளித் தெருவைச் சார்ந்த எம்.எம்.உவைஸ் அவர்கள்.
சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளம் மீது தீராத ஆர்வம் கொண்டு இவர் கடந்த 2009ஆம் ஆண்டில் காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவிலுள்ள மரைக்கார் பள்ளி வளாகத்தைச் சுற்றிய சாலையோரங்களில் தனது சொந்தச் செலவில் முறையான வேலி பாதுகாப்புடன் மரங்களை நட்டு, உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சுவதற்காக சம்பள அடிப்படையில் பணியாளரையும் ஏற்பாடு செய்ததன் விளைவாக இன்று அப்பகுதியில் கடும் வெயில் நேரங்களிலும் நிழல் மேலிட்டு மக்களுக்கு இதமான சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வளர்ந்துள்ள மரங்களால் அப்பகுதியே பசுமையாகக் காட்சியளிக்கிறது. சகோதரர் உவைஸ் அவர்களை போல் தெருவுக்கு இரண்டு நபர் இருந்தால் போதும் நகர் மன்ற தலைவியின் பசுமை காயல் திட்டத்தின் மூலம் நமதூர் பசுமையவது உறுதி..
பொது இடத்தில் மர கன்றுகளை வைத்து அதை பராமிப்பது மிக சிரமம்தான் ஆகையால் தனியார் தோட்டத்தில் அந்த உரிமையாளர் அவர்களே அதை பராமிப்பது மிக சுலபம்... எந்த பயனும் இல்லாமல் தனது நிலத்தை சும்மா காய போடுவது வேதனைக்குரியது...
ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ அதன் பயனை பெற்றால் (அனுபவித்தால்) அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.. ஆமீன் - வாழ்த்துக்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross