ஓர் சமுகத்தின் உயர்வுக்கு உயிர் மூச்சு வாசித்தலே...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[15 November 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23858
எழுத்தறிவித்தவன் இறைவன். அந்த இறைவனின் மிகப்பெரும் அருட்கொடைகளில் ஒன்றுதான் நாம் உலக மொழிகள் யாவும்.
வெறும் சித்திரவடிலான எழுத்துக்கள் சிறுகச் சிறுக கோடுகளாகவும். புள்ளிகளாகவும், வட்டங்களாகவும் வடிவம் மாறி லிபிகளாக உருப்பெற்றது. எழுத்தில்லையேல் எதுவுமில்லை! எனும் அளவிற்கு, அதன் பயன்பாடும் தேவையும் மனித வாழ்வோடு பின்னிப்பினைந்து இரண்டரக் கலந்துவிட்டது.
மொழிகள் யாவும் வெறும் ஒலிகளாக மட்டுமே இருந்திருந்தால் காப்போகிக்கில் அது தன் தன்மையை இழந்து மாண்டு மடிந்துபோயிருக்கும்.
காப்பியங்கள், காவியங்கள், இலக்கண இலக்கியங்கள், இவையாவும் ஓர் கலாச்சாரத்தின் கண்ணாடி பிம்பங்கள். அந்த பிம்பங்கள் பிரதிபளித்தது எழுத்துக்களின் வடிவில்தானே? சரித்திர சான்றுகள், செப்புப் பட்டயங்கள், எழுத்தோலைகள், என ஏராளமானவற்றச் சொல்லலாம். எனவே தாம், எண்ணும், எழுத்தும் கண் எனத் தகும் என வள்ளுவன் பறைசாற்றினான்.
இவையனைத்தும் வெறும் ஏட்டுச் சுரைக்காயைப் போல ஏட்டில் மட்டும் இருந்தால் போதாது. இதழ்கள், நூல்கள் வடிவில் உள்ளவற்றை உள் வாங்கி உணர்ந்து கொண்டு வாசித்தால் மட்டுமே நம் சமூகம் உயர்வு பெறும் என்பது ஆணித்தரமான உண்மையே! எனவே நாம்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross